»   »  ஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல்

ஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோசடி வழக்கில் புழல் சிறையில் இருக்கும் வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதன் பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை.

Rs. 15,000 cash seized from Vendhar movies Madhan in Puzhal prison

இந்நிலையில் மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து போலீசார் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.85 மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் மதன். வட நாட்டில் சுற்றிய அவர் திருப்பூர் வந்து பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள ஒருவரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
Officials have confiscated Rs. 15,000 cash from producer Vendhar movies Madhan who is lodged in Puzhal prison in cheating case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil