»   »  'ஜிகிர்தண்டா' கார்த்திக் சுப்பராஜ் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

'ஜிகிர்தண்டா' கார்த்திக் சுப்பராஜ் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜிகிர்தண்டா படத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதோடு, பெரும் அவமானத்தையும் உண்டாக்கியதாகக் கூறி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

சித்தார்த்-லட்சுமி மேனன் நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா'.

இந்த படத்தை தயாரித்த ‘பைவ் ஸ்டார் பிலிம்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி, தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வழக்கு

வழக்கு

அவர்கள் கூறுகையில், "‘ஜிகர்தண்டா' திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், அதன் தயாரிப்பாளர் கதிரேசன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் இந்தி மொழி உரிமையை தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், திரைப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும் அந்த வகையில் தனக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி மற்றும் நஷ்டஈடாக ரூ.40 லட்சம் கோரி வழக்கு செய்திருக்கிறார்.

தடை

தடை

இந்தி மொழி உள்பட வேறு மொழிமாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவும் வாங்கியிருந்தார். இந்த தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். அதில் தடை உத்தரவை நீக்கக் கோரி கேட்டுக் கொண்டிருந்தார். ‘ஜிகர்தண்டா' படம் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.

நஷ்டம்

நஷ்டம்

வேண்டுமென்றே, படப்பிடிப்பினை கார்த்திக் சுப்பராஜ் தாமதப்படுத்திய வகையில் ஏறத்தாழ ரூ.1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறாகவும், எங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் செய்திகள் பரப்பியதால் இன்றுவரை தெலுங்கு ‘டப்பிங்' உரிமையை விற்க முடியவில்லை. அந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

படமும் நஷ்டம்தான்

படமும் நஷ்டம்தான்

இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதாகக் கூறுகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் எங்களைப் பொருத்தவரை இது பெரிய நஷ்டம் தந்த படம்.

தவறான தகவல்கள்

தவறான தகவல்கள்

கார்த்திக் சுப்பராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா' படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது. இப்போது வேண்டுமென்றே, தவறான தகவல்களை மையப்படுத்தி உண்மைக்கு புறம்பானவற்றை கூறி கோர்ட்டில் எங்கள் மீது வழக்கு தொடுத்து தடை உத்தரவும் பெற்றிருந்தார்.

ரூ 5 கோடி

ரூ 5 கோடி

மேற்படி தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் எங்கள் மீது மீண்டும், மீண்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம்," என்றனர்.

English summary
The Producers of Jigirthanda movie Kathiresan and Kalaiselvi have sued a defamation for Rs 5 cr against director Karthik Subbaraj.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil