»   »  நாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்!

நாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ருத்ரமாதேவி திரைப்படத்திற்கு தெலுங்கானா, மாநிலம் வரி விலக்கு அறிவித்துள்ளது.

தெலுங்கு இயக்குநர், குணசேகர் இயக்கத்தில் நாளை திரைக்குவருகிறது ருத்ரமாதேவி. தற்போதைய தெலுங்கானா மாநில பகுதியான, வாராங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஆண் ஒரு ராணிதான் ருத்ரமாதேவி. அவரது கதையை படமாக எடுத்துள்ளதை பாராட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் படத்திற்கு வரி விலக்கு அறிவித்துள்ளார்.


'Rudhramadevi' gets tax exemption in Telangana

முன்னதாக இன்று காலை, படத்தின் இயக்குநர், குணசேகர் முதல்வர் கேசிஆரை நேரில் சந்தித்து ருத்ரமாதேவி திரைப்படத்தை கண்டுகளிக்க அழைப்புவிடுத்திருந்தார்.


இயக்குநர் ராஜமவுலி இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டில், "தெலுங்கானாவில் ருத்ரமாதேவி படத்துக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது, அருமையான தகவல். அவர் தெலுங்கு மக்கள் அனைவரின் ராணி. எனவே ஆந்திர அரசும் வரி விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.


இத்திரைப்படத்தில் அனுஷ்கா ராணியாக நடித்துள்ளார். அல்லு அர்ஜுனா, ராணா டகுபதி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள்.

English summary
Gunasekhar’s film ‘Rudramadevi’ is exempted from all tax bearings in Telangana State.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil