»   »  நான் ஏன் என் மகனுக்கு விஜய் என்று பெயர் வைத்தேன் தெரியுமா?: எஸ்.ஏ.சி. விளக்கம்

நான் ஏன் என் மகனுக்கு விஜய் என்று பெயர் வைத்தேன் தெரியுமா?: எஸ்.ஏ.சி. விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தனது மகனுக்கு விஜய் என்று பெயர் வைத்ததன் காரணத்தை தெரிவித்துள்ளார்.

அப்பா எஸ்.ஏ.சி. மூலம் கோலிவுட்டில் ஹீரோ ஆனவர் இளைய தளபதி விஜய். விஜய் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான புதிதில் அவர் வளரும் வரை அவருக்காக படம் இயக்கியவர் எஸ்.ஏ.சி.

தந்தையின் நிழலில் வளர்ந்த விஜய்க்கு இயக்குனர் விக்ரமனின் பூவே உனக்காக படம் திருப்புமுனையாக அமைந்தது. விஜய்யை திரை உலகினர் திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த படம் அமைந்தது.

வளர்ச்சி

வளர்ச்சி

அடுத்தடுத்து பிற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் துவங்கினார் விஜய். இன்று விஜய்யை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கும் அளவுக்கு பெரிய ஹீரோவாக வளர்ந்துவிட்டார்.

விஜய்

விஜய்

விஜய் என்பது வழக்கமான பெயர் தான். ஆனால் இன்று பல கோடி ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராக ஆகியுள்ளது விஜய்யின் பெயர்.

வெற்றி

வெற்றி

விஜய் என்றால் வெற்றி என அர்த்தம். அந்த பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் பட ஹீரோக்களின் பெயர் பெரும்பாலும் விஜய் என்று இருக்கும். அந்த காரணத்தினாலேயே என் மகனுக்கும் விஜய் என்று பெயர் வைத்தேன் என்கிறார் எஸ்.ஏ.சி.

நையப்புடை

நையப்புடை

நையப்புடை படத்தில் என்னுடன் நடித்தவரின் பெயர் பா.விஜய், இயக்குனரின் பெயர் விஜய் கிரண். இந்த படத்துடன் இரண்டு விஜயக்கு தொடர்பு இருப்பதால் நையப்புடை நிச்சயம் வெற்றியடையும் என்று நம்பிகையுடன் கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

English summary
Director cum actor S.A. Chandrasekhar told that he named his son Vijay as it means Victory.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil