கலைமாமணி விருது: எஸ்.ஜே சூர்யா முதல் அனிருத் வரை 90 பேருக்கு விருது வழங்கிய முதல்வர்!
சென்னை: கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 2021 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் எஸ்.ஜே சூர்யா, நடிகை சாய் பல்லவி, நடிகர் விக்ரம் பிரபு, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமி, அனிருத் உட்பட 90 பேருக்கு கலைமாமணி விருதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் இங்கு விருது பெறும் அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான். பலருடைய கலை தொண்டு குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் கலைஞர்களை அடையாளம் கண்டு, இந்த விருது வழங்கப்படுகிறது. 90 வயதான முத்துகண்ணம்மாள் முதல் இளம் இசையமைப்பாளர் அனிருத் வரை விருது பெறுகிறார்கள். கலை மாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.

கலைமாணி விருது: இன்றைக்கு நாட்டில் தங்கம் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். ராக்கெட் வேதத்தில் ஒரு நாளைக்கு இருமுறை விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. விருது அறிவித்த போது இருந்த தங்கத்தின் விலையும் இன்றைய விலையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். ஆனால், அவ்வளவு மதிப்பு கூறிய வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் தங்கத்தை விட கலைமாமணி விருதுதான் மிகவும் மதிப்பு. ஏனென்றால் இது தமிழகம் தரும் பட்டம். நலிந்த நிலையில் வாழும் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் நிதி உதவி உயர்த்தப்பட்டுள்ளது, இவை தவிர, சுமார் 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது. பொங்கல் கலைவிழாவை முன்னிட்டு 38 மாவட்டங்களிலும் இசைச்சங்கமம் மற்றும் கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
உதயநிதி பேச்சு: இதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைமாமணி விருது என்ற பெயரை தேர்வு செய்தவர் கலைஞர் கருணாநிதி. தேசிய, சர்வதேச விருதுகளைவிட சிறந்த தாயின் முத்தத்திற்கு நிகரானது கலைமாமணி விருது. திராவிட இயக்கம் எப்போதும் கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடும் இயக்கம் என்றார்.


Click it and Unblock the Notifications











