இது தான் ராஜமெளலியின் கனவு படமா...அவரே தந்த அசத்தல் அப்டேட்

ஐதராபாத் : இந்திய சினிமாவே கொண்டாடப்படும் டைரக்டராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. மகதீரா, நான் ஈ, பாகுபலி, இரண்டு பாகங்கள், ஆர்ஆர்ஆர் என தான் இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட்டாக்கி கவனத்தை ஈர்த்தவர்.

அதிலும் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் என வரிசையாக 1000 கோடி வசுல் படங்களை கொடுத்து பிரம்மிக்க வைத்துள்ளார். அதிக வசுல் சாதனை படைத்த இந்திய படங்களின் பட்டியலில் பாகுபலி 2 தான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.

பாகுபலி 2 படத்தின் 1800 கோடி வசுல் சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இதனால் ராஜமெளலியின் ஒவ்வொரு படமும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மகேஷ்பாபுவை இயக்கும் ராஜமெளலி

மகேஷ்பாபுவை இயக்கும் ராஜமெளலி

மன்னர் கால வரலாற்று படங்களாக பாகுபலி இரண்டு பாகங்களை இயக்கி வெற்றி கண்ட ராஜமெளலி, பீரியாடிக் படமாக ஆர்ஆர்ஆர் படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். தற்போது அடுத்ததாக தெலுங்கு சுப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஆக்ஷன் சாகச படத்தை இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

செம படமா இருக்கும் போலவே

செம படமா இருக்கும் போலவே

ராஜமெளலி - மகேஷ் பாபு இணையும் படம் இந்தியானா ஜோன்ஸ் பட பாணியில் எடுக்கப்பட உள்ளதாம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் முழுவதும் ஆப்பிரிக்க காடுகளில் தான் எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.

ராஜமெளலியின் கனவு படம்

ராஜமெளலியின் கனவு படம்

இந்நிலையில் பல தருணங்களில் தனது கனவு படம் பற்றி ராஜமெளலி குறி உள்ளார். மகாபாரத காவியத்தை சினிமாவாக இயக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என ராஜமெளலி குறி உள்ளார். தற்போது தனது கனவு படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார்.

முக்கிய அப்டேட் தந்த ராஜமெளலி

முக்கிய அப்டேட் தந்த ராஜமெளலி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜமெளலியிடம், எப்போது உங்கள் கனவு படத்தின் வேலைகளை துவக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபு நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க போகிறேன். இதற்கு பிறகு தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளேன்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil
இன்னும் 4 படங்கள் இருக்கா

இன்னும் 4 படங்கள் இருக்கா

இந்த படங்களை இயக்கி முடித்த பிறகே எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்க போகிறேன். அந்த படத்தை இயக்க நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் எப்போது துவக்க போகிறேன் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் தற்போது எடுக்க உள்ள நான்கு படங்களை இயக்கி முடிக்க எத்தனை காலம் ஆகும் என தெரியவில்லை. அதனால் கனவு பட வேலைகள் எப்போது துவங்கப்படும் என தற்போதைய சுழலில் குற முடியாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X