twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருங்கால முதல்வர் விஜய்: எஸ்.வி. சேகரை வைத்து தளபதியை மடக்குதா பாஜக?

    By Siva
    |

    சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர் விஜய்யை வருங்கால முதல்வர் என்று கூறியுள்ளார்.

    இளைய தளபதி விஜய் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது,

    விஜய்

    விஜய்

    இளைய தளபதி விஜய். கடின உழைப்பு. ஒவ்வொரு கட்டமாக முன்னுக்கு வந்த நடிகன் என்றால் அது விஜய். இன்று விஜய்யின் பிறந்தநாள். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், வயதில் மூத்தவர் என்பதால் ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அரசியல்

    அரசியல்

    அரசியலுக்கு வரணும் வரணும்னு விஜய்யோட ஃபேன்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் கிளம்பி வாங்க. ஆனால் அரசியலுக்கு சினிமா நடிகன் வரக் கூடாது என்று சொல்வது எல்லாம் பயத்தில் சொல்லும் வார்த்தை.

    நல்லவர்கள்

    நல்லவர்கள்

    நல்லவங்க வரணும், ஸ்ட்ரெய்ட் பார்வர்டாக இருப்பவர்கள் வரணும், நேர்மையான தன்மையும், மக்களுடைய கஷ்டங்களை புரிந்து அதற்கு என்ன செய்யணும் அப்படிங்கிறது தெரிந்தவர்கள் வந்தால் போதும்.

    ஏகாம்பரம்

    ஏகாம்பரம்

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருக்க வேண்டியது இல்லை. எல்லாம் தெரிந்தவர்களை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் நிர்வாகம் செய்யலாம். அந்த ஒரு காரணத்தினால் தான் சொல்கிறேன்.

    ஆதரவு

    ஆதரவு

    விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. அது எப்போ என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த நல்லவர்கள் வந்தாலும் என்னுடைய ஆதரவு அவர்களுக்கு உண்டு.

    வருங்கால முதல்வர்

    யாரும் பயப்பட வேண்டாம். யார் கட்சி ஆரம்பித்தாலும் அங்கு வருவேன் என்று எல்லாம் இல்லை. வருங்கால முதல்வர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தற்போதே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் எஸ்.வி. சேகர்.

    English summary
    Actor S. V. Shekhar has wished Thalapathy Vijay a very happy birthday and he even calls him as future CM of Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X