»   »  ஒரு வழியாக எஸ்3 ரிலீஸ் தேதி அறிவிப்பு: சூர்யா சொன்ன பெரிய நன்மை இதுவா?

ஒரு வழியாக எஸ்3 ரிலீஸ் தேதி அறிவிப்பு: சூர்யா சொன்ன பெரிய நன்மை இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

 சென்னை: சூர்யாவின் எஸ் 3 படம் ஒரு வழியாக ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த எஸ் 3 டிசம்பர் மாதம் 16ம் தேதி ரிலீஸாகும் என்றார்கள். அதன் பிறகு ரிலீஸ் தேதியை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.


S3 release date announced finally

டிசம்பர் 23ம் தேதியும் படம் வெளியாகாது என்று அறிவித்தார்கள். இந்நிலையில் தான் எஸ் 3 படம் நிச்சயமாக ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே எஸ் 3 பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூட பேச்சு அடிபட்டது. பட ரிலீஸ் தள்ளிப் போனது பெரிய நன்மைக்கு என்று சூர்யா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, வெள்ளி ஒரு நாள் பணி நாள், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை. இதை வைத்து வசூலை அள்ளவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள் போன்று. எஸ் 3 படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாகிறது.

English summary
Suriya's much awaited movie S3 is finally hitting the screens on January 26th. Its telugu version is also releasing on the same date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil