»   »  ஒரு 75 வயது 'இளைஞனின்' சுவாரஸ்யமான சேட்டைகள்தான் டூரிங் டாக்கீஸ்! -எஸ் ஏ சந்திரசேகரன்

ஒரு 75 வயது 'இளைஞனின்' சுவாரஸ்யமான சேட்டைகள்தான் டூரிங் டாக்கீஸ்! -எஸ் ஏ சந்திரசேகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு 75 வயது இளைஞனின் சுவாரஸ்யமான சேட்டைகள்தான் எனது டூரிங் டாக்கீஸ் திரைப்படம் என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கி, தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் டூரிங் டாக்கீஸ். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், எஸ் ஏ சந்திரசேகரனுடன், அபி சரவணன், பாப்ரி கோஷ், ஹேமமாலினி, அஸ்வின், காயத்ரி, ரோபோ சங்கர், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

இந்தப் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. படத்தைப் பார்த்த பலரும் எஸ் ஏ சந்திரசேகரனைப் பாராட்டி வருகின்றனர்.

படம் குறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "இந்தப் படம் ஒரு டிக்கெட்டில் இரண்டு படங்களாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

சொந்தக் கதை

சொந்தக் கதை

இதில் ஒரு பாதி கதை என் சொந்த அனுபவங்கள்தான். நான் கடந்து வந்த பாதையை அப்படியே திரும்பிப் பார்த்தபோது தோன்றியவற்றை தொகுத்து படமாக்கியிருக்கிறேன்.

நான் ஏன் நடித்தேன்?

நான் ஏன் நடித்தேன்?

அந்த வேடத்தில் ஏன் நான் நடித்தேன் என்றால்.. அந்த வாழ்க்கையை உணர்ந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில் என்னால்தான் அதை பிரதிபலிக்க முடியும் என்பதால்தான். மற்றபடி நான் ஒரு நடிகன் அல்ல.

எழுபத்தைந்து வயதில்

எழுபத்தைந்து வயதில்

எழுபத்தைந்து வயதில் ஒருவனுக்கு காதல் வருகிறது. அந்த வயதில் வரக்கூடாததல்ல அது. இயற்கையான விஷயம் அது. அப்படி காதல் வயப்பட்ட ஒருவன் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறேன்.

சமூகத்துக்கு செய்தி

சமூகத்துக்கு செய்தி

இந்தப் படத்தில் கமர்ஷியலான விஷயங்களோடு சமூகத்துக்கு தேவையான ஒரு அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்கள் படும் பாட்டைப் பதிவு செய்திருக்கிறேன்.

விஐபிக்கள் பாராட்டு

விஐபிக்கள் பாராட்டு

படத்தின் இரண்டாம் பகுதியைப் பார்த்த திரையுலக விஐபிகள் கண்ணீர் மல்க பாராட்டு தெரிவித்தனர். ஏ ஆர் முருகதாஸ் மனதில் அடித்தளத்திலிருந்து என்னை வாழ்த்தினார். விஜய் ஆன்டனி பேச வார்த்தையின்றி தவித்ததைப் பார்த்தேன். இந்தப் படம் பார்த்த பாதிப்பில், புத்தாண்டு தினத்தன்று தன் வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்ணை வைத்து கேக் வெட்டியதாகச் சொன்னார்.

இசைஞானி

இசைஞானி

சரியான படத்தைத் தந்திருப்பதாக இசைஞானி இளையராஜா பாராட்டினார்.

என்னுடைய 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

English summary
S V Chandrasekaran's Touring Talkies gets rave reviews from film personalities.
Please Wait while comments are loading...