Don't Miss!
- News
"அரோகரா".. பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிய வானதி சீனிவாசன்.. "இதயம் கனக்குதே" - உருகிய அண்ணாமலை!
- Finance
சியோமி மனு குமார் ஜெயின் ராஜினாமா.. சீன நிறுவன எதிர்காலம் கேள்விக்குறி தான்..!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- Sports
அட இது லிஸ்டலையே இல்லையே.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த அஸி, அணி.. டெஸ்ட் தொடருக்காக ஸ்பெஷல் யுக்தி!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நான் கோபக்காரன்.. ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை : இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய 'யார் இந்த எஸ்.ஏ.சி' எனும் யூடியூப் சேனலில்' தனது மனைவி ஷோபா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
எஸ் ஏ சி தனது 80 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார் . அந்த புகைப்படத்தில் அவருடைய மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் யாருமே இல்லை.
இதையடுத்து, எஸ் ஏ சி மற்றும் ஷோபா இருவரும் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கூட விஜய் கலந்த கொள்ளாதது பெரும் பேசுபொருளானது.

சிவாஜி தலைமையில் கல்யாணம்
அதில், என் திருமணம் சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் சொன்னேன் அவர் வருவதாக கூறினார். ஆனால், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன், அதாவது கமலாம்மா தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று சிவாஜியிடம் கூறினேன் அவர் சிரித்த முகத்தோடு சரி என்றார். என் திருமணத்திற்கு, எனது அம்மா, அண்ணன் எல்லாரும் வந்தார்கள் ஆனால் என் அப்பா திருமணத்திற்கு வரவே இல்லை. அப்பா வருவார் என்று கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்தேன்.

கமலாம்மா தாலி எடுத்து கொடுத்தார்
சிவாஜியின் மனைவி கமலாம்மா தாலி எடுத்து கொடுக்க நான் ஷோபா கழுத்தில் கட்டினேன். கமலாம்மாலின் முகம் தெய்வீகமான முகம், வீட்டிற்கு சென்றவர்களை உபசரிப்பதில் அவரைப்போல யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க என் திருமணம் நடந்தது. இன்று வரை நானும் என் மனைவியும் என் மகனும் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

பலமுறை அடித்திருக்கிறேன்
எனக்கு அதிக கோபம் வரும், நான் முரட்டுக்கார பையன், கோபக்காரன். ஆனால் நான் எப்படிப்பட்டவன் என் மனது எப்படிப்பட்டது என்று என் மனைவி ஷோபாவுக்குத்தான் தெரியும். பலமுறை அவளை நான் அடித்திருக்கிறேன். நிறைய சண்டைகள் வந்து இருக்கிறது. வேறு ஒருவராக இருந்தால் என்னை விட்டு பிரிந்து சென்றிருப்பார். ஆனால் ஷோபா அப்படி செய்யவில்லை.

அவள் இல்லாமல் நான் இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவள் இல்லை. அடித்துவிட்டாலும் மறுநாள் அவளிடம் சென்று நான் மன்னிப்பு கேட்பேன். உடனே அவள் அனைத்தையும் மறந்துவிட்டு பேசுவாள். 48 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் அவள் என் மனைவியாகவில்லை. மனைவியாகவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள், அவள் இன்னும் என் காதலியாகவே இருக்கிறாள்.
Recommended Video

காதலனாகவே மூச்சு அடங்கவேண்டும்
நான் இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியாக இருப்பதற்கு காரணம் அவள் தான். என்னுடைய மொத்த எனர்ஜியும் அவள் தான். நான் கடவுளிடம் வேண்டுவது ஒன்றுதான், நான் அவளின் காதலனாக இன்று வரை வாழ்ந்து விட்டேன். கடைசி வரை காதலனாகவே இருக்கனும், காதலனாகவே மூச்சு அடங்கவேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.