twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் என்னை மதிக்கலைன்னு நான் சொன்னேனா? கோபத்தில் கொந்தளித்த சந்திரசேகர்!

    |

    சென்னை : விஜய் என்னை மதிக்கவில்லை என்று நான் என்னைக்காவது சொன்னேனா என எஸ்.ஏ.சந்திரசேகர் கோபத்தில் நிருபரிடம் கொந்தளித்தார்.

    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். ரஜினிகாந்த், விஜயகாந்த்,சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

    சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இதனால் புரட்சி இயக்குநர் என பெயர் எடுத்தார்.

    விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை… தளபதி 67ல் இருந்து நான்கு Exclusive Updates விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை… தளபதி 67ல் இருந்து நான்கு Exclusive Updates

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

    வீட்டில் ஜோசப் விஜய், வெளியில் விஜய்

    வீட்டில் ஜோசப் விஜய், வெளியில் விஜய்

    நான் கடவுள் இல்லை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து பேட்டி அளித்த எஸ்.ஏ.சந்திர சேகர் விஜய் குறித்த பல கேள்விக்கு பதிலளித்தார். அதில், என் பெயர் எஸ் அலெக்ஸ் சந்திரசேகர். நான் வெளியுலகத்திற்கு வரும் போது என்னுடைய பெயரில் கிறிஸ்தவ மதம் இருக்க கூடாது என்பதற்காக எஸ் ஏ சந்திரசேகர் என்று வைத்துக் கொண்டேன். அதேபோல் தான் வீட்டில் ஜோசப் விஜய், வெளியில் விஜய்யாகத்தான் இருக்கிறார்.

    விஜய் என்னை மதிக்கவில்லை

    விஜய் என்னை மதிக்கவில்லை

    மேலும், பணத்திற்காக பெற்றவர்களை விஜய் மதிப்பது இல்லை என்ற வதந்தியை மறுத்த சந்திர சேகர், என் பையன் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கயாச்சும் சொல்லிருக்கேனா? நான் ஒரு அனுபவம் வாய்ந்த மனிதன், என் வாழ்க்கையில் பல குடும்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன். எனது அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன் என்றார்.

    பீஸ்ட் படத்தில் மேஜிக் இல்லை

    பீஸ்ட் படத்தில் மேஜிக் இல்லை

    தொடர்ந்து விஜய் குறித்து பேசிய எஸ்.ஏ. சந்திர சேகர், பீஸ்ட் படத்தைப் பார்த்து நான் ஏமாந்து விட்டேன். விஜயை மட்டுமே நம்பி படம் எடுக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளைப் பற்றிய ஒரு சீரியஸான கதை. அந்த கதையில் மேஜிக் இருக்க வேண்டும். ஒரு 'ரா' முகவர் எப்படி நடந்து கொள்வார், எப்படி பேசுவார் என்பதை இயக்குநர் நன்றாக தெரிந்து கொண்டு படத்தை இயக்கி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் அது இல்லை. இருந்தாலும் பீஸ்ட் படத்தில் வந்த அரபிக் குத்து பாடலை விஜய்யின் தீவிர ரசிகனாக ரசித்தேன் என்றார்.

    English summary
    Filmmaker SA Chandrasekhar, father of Thalapathy Vijay denied a media report that has the potential to further aggravate his strained relationship with his son Vijay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X