Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
எஸ்ஏசி.,யின் பிறந்தநாளில் தான் இல்லை...ஆயுள் விருத்திக்காக நடந்த புஜையில் கூட விஜய் இல்லையா
சென்னை : 1980 களில் டாப் டைரக்டராக இருந்த எஸ்.ஏ.சந்திசேகர் தான் தனது மகன் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். பல படங்களிலும் விஜய்யை நடிக்க வைத்த அவர், விஜய்யை ஹீரோவாகவும் அறிமுகம் செய்து வைத்தார்.
Recommended Video
நாளைய தீர்ப்பு படத்தின் முலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜய், இன்று டாப் ஹீரோவாக உள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏசி.,க்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பேசிக் கொள்வது இல்லை என குறப்படுகிறது.
இதை முதலில் மறுத்து வந்தார் எஸ்ஏசி. ஆனால் விஜய் மக்கள் இயக்க விவகாரத்தில் தனது பெற்றோர்கள் மீதே வழக்கு போடும் அளவிற்கு விஜய் போனதால் எஸ்ஏசி - விஜய் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக குறப்பட்ட தகவல்கள் உண்மையானது.
விஜய் வீட்டுக்கு வரணும்...கண் கலங்கிய எஸ்ஏசி...வேண்டுகோள் வைக்கும் ரசிகர்கள்!

விஜய்யிடம் எஸ்ஏசி., கேட்பது
சமீபத்தில் எஸ்ஏசி பேட்டி ஒன்றில் கூட 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது விஜய் வந்து தங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக குறி இருந்தார். இதனால் பலரும் பெற்றோரின் ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா என கேட்டு வந்தனர். எஸ்ஏசி.,க்கு ஆதரவாக விஜய்யை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். கடும் விமர்சனங்களும் எழுந்தன.

தனியாக பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் ஜுலை 2 ம் தேதி எஸ்ஏசி தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகின. இதில் விஜய்யின் அம்மாவும், எஸ்ஏசி.,யின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் மட்டும் எஸ்ஏசி.,க்கு கேக் ஊட்டி விடுவதை போல் இருந்தது. இதனால் தன்னை வளர்த்து விட்ட தந்தையின் பிறந்தநாளில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லையே என பலரும் கேள்வி கேட்டு, விஜய்யின் செயலை விமர்சித்து வந்தனர்.

இதுக்கு கூட விஜய் வரலியே
இந்த சமயத்தில் இன்று, எஸ்ஏசி மற்றும் ஷோபா ஆகியோர் திருக்கடையூரில் பிரபலமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஹோமம், சிறப்பு புஜை ஆகியன நடத்தி வழிபாடு நடத்தி உள்ளனர். ஆயுள் விருத்திக்கான ஹேமம் நடத்தப்பட்டுள்ளது. விஜய் பெயரிலும் சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டுள்ளது. பிறகு அன்னதானமும் செய்துள்ளனர்.

விஜய்யில்லாமல் நடந்த கல்யாணம்
திருக்கடையுரில் 60, 70, 80 திருமணங்கள், ஆயுள் ஹோமங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த திருமணங்களின் போது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆகியோர் வயதான தம்பதியின் தலையில் புனித நீர் ஊற்றி, பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் எஸ்ஏசி மற்றும் ஷோபாவுடன் யாரும் வரவில்லை. சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, தனியாக ஹோமம், புஜை ஆகியவற்றில் கலந்து கொண்டனர். மாலை மாற்றி, இவர்களின் திருமணமும் நடைபெற்றது. இதற்கு கூட விஜய் வராதது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

விஜய் இப்போ எங்கே இருக்கார்
விஜய் தற்போது வாரிசு படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றுள்ளார். சென்னையை தொடர்ந்து மீண்டும் ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஷுட்டிங் ஜுலை 27 ம் தேதி வரை நடக்கும் என சொல்லப்படுகிறது.