»   »  தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! - கலைப்புலி தாணு

தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! - கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநராக இருந்து இப்போது முழு நடிகராக மாறியுள்ள எஸ் ஏ சந்திரசேகரனை தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் என்று புகழ்ந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

தாணு தயாரித்துள்ள நையப்புடை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் 73 வயது எஸ் ஏ சந்திரசேகரன்.

SAC is South India's Amitabh Bachchan, says Thanu

நடிப்பில் இனி விஜய்க்குப் போட்டி நான்தான் என்று இந்தப் படத்தின் ஆரம்ப விழாவில் கூறிய எஸ்ஏசி, இப்போது சொன்னதை நிரூபிக்கும் வகையில் நடித்திருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் குறித்து தாணு பேசுகையில், "நினைத்ததைவிட 'நையப்புடை' படம் நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவை, சண்டை என எஸ்.ஏ.சி யின் பலமுகங்கள் படத்தில் வெளிப்பட்டுள்ளன. படம் பார்த்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். 'நையப்புடை' பெரிய படமாக வரும் என்றேன். வட இந்தியாவில் அமிதாப் பச்சன் போல தென்இந்தியாவில் நல்ல நடிகராக எஸ்.ஏ.சி திகழ்வார்," என்றார்.

English summary
Producer Kalaipuli Thanu praises director turned actor SA Chandrasekar as Amithab Bachchan of South India.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil