எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான் ... வெளிப்படையாக சொன்ன எஸ்ஏசி
சென்னை : விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மனகசப்பு இருந்து வந்ததாக கோலிவுட்டில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது பற்றி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பிலோ, விஜய் தரப்பிலோ எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை.
Recommended Video
தந்தை - மகன் இடையே பல விஷயங்களில் மனவருத்தம் ஏற்பட்டதை, எஸ்ஏசி.,யின் பல பேட்டிகளில் காண முடிந்தது. விஜய்யை ஒரு மாஸ் நடிகராக்க தான் பாடுபட்டதாகவும், ஆனால் இன்று விஜய் தன்னை மதிப்பதில்லை என்பது போல் பல பேட்டிகளில் பேசி இருந்தார். ஆனால் தந்தை - மகன் இடையே என்ன பிரச்சனை, எதனால் மனவருத்தம் என்ற உண்மை காரணம் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை.

விஜய்யின் அரசியல் பிரவேசம்
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாக எஸ்சிஏ தொடர்ந்து பேசி வந்தார். ஒரு கட்டத்தில் சத்தமில்லாமல் அடங்கிப் போனார். பிறகு தானும் அரசியலுக்கு வர போவதாக கூட கூறி வந்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக தான் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பிறகு கலைப்பதாக அறிவித்தார்கள். இவை எதற்கும் காரணம் கூறப்படவில்லை.

வழக்கு தொடர்ந்த விஜய்
இதுவரை அரசல் புரசலாக இருந்த தந்தை - மகன் விவகாரம் தற்போது விஜய் தொடர்ந்த வழக்கால் பூதாகரமாக வெடித்துள்ளது. தனது பெயர் மற்றும் புகழை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும், கொடி, போஸ்டர் என எதிலும் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது தடை கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட 11 பேர் மீது விஜய் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இரண்டு விஜய் மக்கள் இயக்கமா
ஆனால் விஜய் மக்கள் இயக்கம் எப்போதோ கலைக்கப்பட்டு விட்டதாகவும், அதன் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் எஸ்ஏசி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விஜய் தரப்பு விளக்கத்தில் எஸ்ஏசி தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தான் கலைக்கப்பட்டது. எனது தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக கூறப்பட்டது. இதனால் இரண்டும் விஜய் மக்கள் இயக்கமா என அனைவரும் அதிர்ச்சி அடைந்தவர். இதனையடுத்து விஜய் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஷோபாவுடன் விஜய்க்கு என்ன பிரச்சனை
தந்தை எஸ்ஏசி உடன் சில ஆண்டுகளாக விஜய்க்கு பிரச்சனை இருப்பது தெரியும். ஆனால் தாய் ஷோபா மீது விஜய்க்கு பாசம் அதிகம். ஆனால் அவர் பெயரையும் எதற்காக வழக்கில் சேர்த்தனர். அம்மாவுடன் விஜய்க்கு என்ன பிரச்சனை என்ற குழப்பமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. பிரச்சனை கோர்ட் வரை சென்றுள்ளது என்றால் வேறு ஏதோ வலுவான காரணம் இருக்கிறது என்று கூட சிலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

வாசலில் காக்க வைத்தாரா விஜய்
இந்நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு எஸ்ஏசி பேட்டி அளித்துள்ளார். பத்திரிக்கையில் வெளியான எஸ்ஏசி பேட்டியில், எஸ்ஏசி.,யும் ஷோபாவும் விஜய்யை பார்க்க அனுமதி கேட்டு அவரது வீட்டு வாசலில் காரில் காத்திருந்ததாகவும், நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு ஷோபாவை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறு விஜய் கூறியதாகவும், இதனால் கோபித்துக் கொண்டு எஸ்ஏசி.,யும் ஷோபாவும் திரும்பி சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் பிரச்சனை இருப்பது உண்மை
இதனால் இது தொடர்பாக சோஷியல் மீடியாவிலும், சில மீடியாக்களுக்கு வீடியோ மூலமும் எஸ்ஏசி விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான். அதுவும் இப்போது தான். நானும், விஜய்யின் அம்மா ஷோபாவும் விஜய் வீட்டு வாசலில் காத்திருந்ததாகவும், அவர் ஷோபாவை மட்டும் உள்ளே வர அனுமதித்ததாகவும் வெளியான தகவல் உண்மையல்ல. இதை சொல்ல வேண்டிய கடமை எனக்குள்ளது. விஜய்யும் அவரது அம்மாவும் இப்போதும் பேசிக் கொள்கிறார்கள். மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என எஸ்ஏ சந்திரசேகர் தெளிவாக விளக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











