விஜய்யை போட்டு கொடுக்க தனி ரூட் போடுகிறாரா எஸ்ஏசி ?...உச்சகட்ட பயத்தில் விஜய்
சென்னை : விஜய்யின் விஜய் மக்கள் இயக்க கட்சி சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து கலக்கி வருகிறது. பலத்தை காட்டி, விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஸ்டிராங்கான அடித்தளம் அமைத்து வருகிறார்கள் என்றே சொல்லப்படுகிறது.
ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த வளர்ச்சி அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் வந்தது தான் என்றும், கட்சியில் எஸ்ஏசி.,யின் தலையீடு இல்லாமல் இருப்பதால் தான் இந்த வளர்ச்சி என்றும் இரு வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால் எப்படியாவது விஜய்யை அரசியலுக்கு கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் மட்டும் எஸ்ஏசி உறுதியாக இருப்பதாக பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்ஏசி.,யின் மாஸ்டர் பிளான்
இதற்காக தளபதி விஜய்யின் தந்தையான எஸ்ஏசி புதிதாக ஒரு யூட்யூப் சேனலை தொடங்க இருக்கிறாராம். அந்த யூட்யூப் சேனலில் சினிமா பற்றிய தன்னுடைய அனுபவத்தையும், தான் கடந்து வந்த பாதையை பற்றியும் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சேனலில் தளபதி விஜய்யின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்தும் பேச இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சைலன்டாக காய் நகர்த்தும் விஜய்
அரசியல் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளியில் சொல்லாமல் கமுக்கமாக காய் நகர்த்தி, சைலன்டாக சாதிக்கும் பாணியை கடைபிடித்து வருகிறார் விஜய். ஆனால் அவருடைய தந்தையான எஸ்ஏசி விஜய்யை அரசியலுக்குள் ஈடுபடுத்தி விட வேண்டும் என்ற பல நேரங்களில் விஜய்யிடம் எதுவும் கேட்காமல் பல விஷயங்களை பேசி அதற்காக விஜய்யிடம் திட்டும் வாங்கியிருக்கின்றாராம். இதனால் விஜய்க்கும் தனக்கும் டேர்ம்ஸ் சரியில்லை என எஸ்சிஏ.,யே பேட்டிகளில் கூட கூறி உள்ளார்.

பெற்றோர் மீதே வழக்கு போட்ட விஜய்
கட்சியை வளர்ப்பதற்காக தனது பெயரையும், புகழையும் பயன்படுத்துவதாக கூறி அம்மா, அப்பா மீதே புகார் கொடுத்து, வழக்கு போட்டார் விஜய். இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாகி, பிறகு தனது தலைமையிலான விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாகவும் எஸ்ஏசி அறிவித்த பிறகே இது விவகாரம் ஒரு வழியாக ஓய்ந்தது.

இதுக்கும் அவர் தான் காரணமா
சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னுடைய போட்டோவையோ தன்னுடைய பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் மக்கள் இயக்கத்திற்கு விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். அப்படி எச்சரித்தும் கூட பல இடங்களில் அவருடைய அடையாளங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் எஸ்ஏசி தான் காரணம் என்று அவர்மீது விஜய் சரியான கோபத்தில் இருக்கிறாராம்.

என்னவெல்லாம் சொல்ல போறாரோ
இந்த நேரத்தில் இப்படி தனியாக யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் எஸ்ஏசி விஜய் பற்றி பல கருத்துக்களை முன்வைக்கும் போது அது விஜய்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறுகின்றனர். மற்றொரு பக்கம் தளபதி விஜய்யை பற்றி நாம் அறியாத பல விஷயங்களை எஸ்ஏசி பகிர்ந்து கொள்வார் என்று அவர் யூடியூப் சேனலுக்கு ஆதரவு குரலும் இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











