»   »  திடீர் சிக்கலில் "சச்சின்": நாளை ரிலீஸாகுமா? விஜய் நடித்துள்ள "சச்சின் படப் பாடலை, தெலுங்குப் படத்திலிருந்து திருடி விட்டதாக கூறி தெலுங்குப் படத் தயாரிப்பாளர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து "சச்சின் படச் சுருளை வினியோகஸ்தர்களிடம் வழங்கஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.விஜய் நடித்து நாளை (தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்) வெளியாகவுள்ள படம் "சச்சின். இப்படத்தை கலைப்புலி தாணுதயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். தெலுங்குப் பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தைதயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.அதில், நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போதுசச்சின் படத்திற்கும் இசையமைத்துள்ளார்."சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல்,சச்சின் படத்தில் வரும் "கட்டிக்கோடா என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார்."சங்கர்தாதா பாடல்களுக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அவரும் 8பாடல்களுக்கு இசையமைத்தார். இதில் "நா பேரு காஞ்சனமாலா பாட்டு சூப்பர் ஹிட் ஆனது.இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்றாலும் கூட அதைப் பயன்படுத்தும் உரிமை எங்களது நிறுவனத்திடமே உள்ளது. இதேட்யூன்களை நாங்கள் எங்களது அடுத்த படத்திலும் பயன்படுத்துவதாக இருந்தோம். ஆனால் சச்சின் படத்தில் இந்த ட்யூனைஅவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.சச்சின் பட ஆடியோ கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளர் தாணு பல லட்சம் சம்பாதித்து விட்டார். தற்போது படம்ரிலீஸாகவுள்ள நிலையில் படச் சுருள் அவரிடம் வழங்கப்பட உள்ளது.எனவே இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பாப்பய்யா.மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், சச்சின் படச் சுருள் பெட்டிகளை வினியோகஸ்தர்களிடம் அளிக்கக் கூடாது என்று தடைவிதித்து விசாரணையை இன்றைக்கு (13ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.நாளை (14ம் தேதி) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கால் சச்சின் படம் வழக்கில்சிக்கியுள்ளது. தடை நீக்கப்பட்டால் தான் படம் ரிலீஸ் ஆகும்.

திடீர் சிக்கலில் "சச்சின்": நாளை ரிலீஸாகுமா? விஜய் நடித்துள்ள "சச்சின் படப் பாடலை, தெலுங்குப் படத்திலிருந்து திருடி விட்டதாக கூறி தெலுங்குப் படத் தயாரிப்பாளர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து "சச்சின் படச் சுருளை வினியோகஸ்தர்களிடம் வழங்கஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.விஜய் நடித்து நாளை (தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்) வெளியாகவுள்ள படம் "சச்சின். இப்படத்தை கலைப்புலி தாணுதயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். தெலுங்குப் பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தைதயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.அதில், நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போதுசச்சின் படத்திற்கும் இசையமைத்துள்ளார்."சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல்,சச்சின் படத்தில் வரும் "கட்டிக்கோடா என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார்."சங்கர்தாதா பாடல்களுக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அவரும் 8பாடல்களுக்கு இசையமைத்தார். இதில் "நா பேரு காஞ்சனமாலா பாட்டு சூப்பர் ஹிட் ஆனது.இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்றாலும் கூட அதைப் பயன்படுத்தும் உரிமை எங்களது நிறுவனத்திடமே உள்ளது. இதேட்யூன்களை நாங்கள் எங்களது அடுத்த படத்திலும் பயன்படுத்துவதாக இருந்தோம். ஆனால் சச்சின் படத்தில் இந்த ட்யூனைஅவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.சச்சின் பட ஆடியோ கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளர் தாணு பல லட்சம் சம்பாதித்து விட்டார். தற்போது படம்ரிலீஸாகவுள்ள நிலையில் படச் சுருள் அவரிடம் வழங்கப்பட உள்ளது.எனவே இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பாப்பய்யா.மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், சச்சின் படச் சுருள் பெட்டிகளை வினியோகஸ்தர்களிடம் அளிக்கக் கூடாது என்று தடைவிதித்து விசாரணையை இன்றைக்கு (13ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.நாளை (14ம் தேதி) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கால் சச்சின் படம் வழக்கில்சிக்கியுள்ளது. தடை நீக்கப்பட்டால் தான் படம் ரிலீஸ் ஆகும்.

Subscribe to Oneindia Tamil
விஜய் நடித்துள்ள "சச்சின் படப் பாடலை, தெலுங்குப் படத்திலிருந்து திருடி விட்டதாக கூறி தெலுங்குப் படத் தயாரிப்பாளர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து "சச்சின் படச் சுருளை வினியோகஸ்தர்களிடம் வழங்கஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் நடித்து நாளை (தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்) வெளியாகவுள்ள படம் "சச்சின். இப்படத்தை கலைப்புலி தாணுதயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். தெலுங்குப் பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தைதயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போதுசச்சின் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

"சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல்,சச்சின் படத்தில் வரும் "கட்டிக்கோடா என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார்.

"சங்கர்தாதா பாடல்களுக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அவரும் 8பாடல்களுக்கு இசையமைத்தார். இதில் "நா பேரு காஞ்சனமாலா பாட்டு சூப்பர் ஹிட் ஆனது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்றாலும் கூட அதைப் பயன்படுத்தும் உரிமை எங்களது நிறுவனத்திடமே உள்ளது. இதேட்யூன்களை நாங்கள் எங்களது அடுத்த படத்திலும் பயன்படுத்துவதாக இருந்தோம். ஆனால் சச்சின் படத்தில் இந்த ட்யூனைஅவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சச்சின் பட ஆடியோ கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளர் தாணு பல லட்சம் சம்பாதித்து விட்டார். தற்போது படம்ரிலீஸாகவுள்ள நிலையில் படச் சுருள் அவரிடம் வழங்கப்பட உள்ளது.

எனவே இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பாப்பய்யா.

மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், சச்சின் படச் சுருள் பெட்டிகளை வினியோகஸ்தர்களிடம் அளிக்கக் கூடாது என்று தடைவிதித்து விசாரணையை இன்றைக்கு (13ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.

நாளை (14ம் தேதி) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கால் சச்சின் படம் வழக்கில்சிக்கியுள்ளது. தடை நீக்கப்பட்டால் தான் படம் ரிலீஸ் ஆகும்.


Read more about: vijay, sachin, new flim, release, lands, trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil