twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் பேசியதில் என்ன தவறு இருக்கு...சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி

    |

    சென்னை : பட ப்ரோஷனுக்காக சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்காக அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.சாய் பல்லவி மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனங்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சாய் பல்லவி. தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.

    சாய் பல்லவி தற்போது தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா டகுபதிக்கும் ஜோடியாக விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட் ரோலில் நடித்துள்ளார்.

    ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என நினைத்தேன்.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சுவாரஸ்யம்ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என நினைத்தேன்.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சுவாரஸ்யம்

    அப்படி என்ன பேசினார்

    அப்படி என்ன பேசினார்

    விரத பர்வம் படத்தின் ப்ரோமோஷனுக்காக யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாய் பல்லவி, இடதுசாரி, வலதுசாரி என கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒரு போதும் கூற முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என காட்டி இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் பசுவை கொண்டு சென்ற ஒருவரை இஸ்லாமியர் என நினைத்து கும்பலாக தாக்கி, கொன்று விட்டு ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டுள்ளனர்.

    சர்ச்சையான பேட்டி

    சர்ச்சையான பேட்டி

    காஷ்மீரில் பண்டிட்களின் படுகொலைக்கும் பசுவுக்காக மனிதர்களை தாக்குபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால் நீங்கள் யாராக இருந்தாலும் நீதி கிடைக்காது. சிறு பான்மையினர்களை பெரும்பான்மையினர் தாக்குவது தவறு. சரிசமமான இருவருக்கிடையே தான் போட்டி இருக்க வேண்டும் என பேசினார். இந்த வீடியோ வைரலாகி, சர்ச்சை கிளப்பியது. சிலர் சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    சாய் பல்லவி மீது வழக்கு

    சாய் பல்லவி மீது வழக்கு

    சாய் பல்லவி மத வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசியதாக சில அமைப்புக்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து சாய் பல்லவி மீது எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

    விளக்க வீடியோ வெளியீடு

    விளக்க வீடியோ வெளியீடு

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தன்னை வைத்து கிளப்பப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பேச்சிற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அதில் அவர், நான் பேசியதற்காக விளக்கம் அளித்து இது போல் ஒரு வீடியோ வெளியிடுவது இது தான் முதல் முறை. இதற்கு முன் எனது கருத்துக்களை பகிர மட்டுமே வீடியோ பதிவிட்டுள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ வெளியிடுகிறேன்.

    இப்படி செய்வது தவறு

    இப்படி செய்வது தவறு

    சில நாட்களுக்கு முன் நான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இதற்காக எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. என்னை பொருத்த வரை மனிதர்கள் அனைவருமே ஒன்று தான். அதைத் தான் நான் எனது பேட்டியில் சொன்னேன். ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், ஜாதி, கலாச்சாரம், மொழி அடிப்படையில் பிரித்து பார்க்கக் கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான்.

    லைக்குகளை அள்ளும் வீடியோ

    லைக்குகளை அள்ளும் வீடியோ

    நான் பயின்ற 14 வருட பள்ளி வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என உறுதிமொழி எடுத்து அதுவே மனதில் பதிந்து விட்டது. சமீபத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் டைரக்டரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் நான் இதையே தான் கூறினேன். எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என்றார். சாய்பல்லவியின் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    English summary
    In her recent interview Sai Pallai talks when compairing about Kashmir Pandit issue and cow vigilantism. Her speech becomes controversy and filed case against her. Today she explained her speech and released video in instagram page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X