»   »  ஒரு வயது கூட ஆகாத மகனுக்கு ரூ.1.30 கோடி கார் பரிசளித்த வாரிசு நடிகர்

ஒரு வயது கூட ஆகாத மகனுக்கு ரூ.1.30 கோடி கார் பரிசளித்த வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் ஒரு வயது கூட ஆகாத தனது மகனுக்கு ரூ. 1.30 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கான். வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி தைமூருக்கு ஒரு வயது ஆகும். தைமூரின் முதலாவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Saif Ali Khan gifts costly car to Taimur

இந்நிலையில் சயிப் அலி கான் ரூ.1.30 கோடி மதிப்புள்ள எஸ்ஆர்டி ஜீப்பை நேற்று வாங்கியுள்ளார். இந்த ஜீப்பில் குழந்தைகளுக்கு என்று தனி சீட் உள்ளது. நான் தைமூரை அந்த சீட்டில் உட்கார வைத்து ரைடு போவேன் என்றார் சயிப் அலி கான்.

Saif Ali Khan gifts costly car to Taimur

தைமூருக்கு குழந்தைகள் தின பரிசாக இந்த காரை வாங்கியுள்ளார் சயிப். இதை பார்த்து பாலிவுட்காரர்கள் வியக்கிறார்கள். குட்டிப் பாப்பாவுக்கு கார் பரிசா, சபாஷ் என்று நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள்.

தைமூர் பிறந்த நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Saif Ali Khan has gifted a Rs. 1.30 crore worth car to his little muchkin Taimur Ali Khan who will be turning a year old next month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil