»   »  பிழைப்புக்காக வீடுகளில் பத்து, பாத்திரம் தேய்க்கும் வெற்றிப்பட இயக்குனரின் முன்னாள் மனைவி

பிழைப்புக்காக வீடுகளில் பத்து, பாத்திரம் தேய்க்கும் வெற்றிப்பட இயக்குனரின் முன்னாள் மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: சாய்ரத் என்ற சூப்பர் ஹிட் மராத்தி படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளேவின் முன்னாள் மனைவி பிழைப்புக்காக வீட்டு வேலை செய்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான மராத்தி படமான சாய்ரத் சூப்பர் ஹிட்டானது. வசூலை அள்ளிக் குவித்த அந்த படத்தை நாகராஜ் மஞ்சுளே இயக்கினார். இந்நிலையில் நாகராஜின் முன்னாள் மனைவி சுனிதா புனேவில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறார்.

'Sairat' director Nagraj Manjule’s ex-wife works as a house help in Pune

நாகராஜும், சுனிதாவும் கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 8ம் வகுப்பு வரை படித்துள்ள சுனிதா புனேவில் பல வீடுகளில் வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சுனிதாவின் தாய் கூறுகையில்,

15 ஆண்டுகளாக என் மகள் நாகராஜின் வீட்டில் கஷ்டப்பட்டார். விவாகரத்தின்போது நாகராஜ் வெறும் ரூ.7 லட்சம் தான் அளித்தார். ஆனால் இன்று அவர் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார் என்றார்.

சாய்ரத் ஹிட்டானதால் நாகராஜிடம் இருந்து பணம் பறிக்க சுனிதா இப்படி செய்வதாக விவரம் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Super hit Marathi movie Sairat's director Nagaraj Manjule's former wife is working as a maid in Pune.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil