»   »  ரிலீஸானது ஜெயம் ரவியின் "சகலகலாவல்லவன்".. ரசிகர்களின் டிவிட்டுகளைப் பாருங்க!

ரிலீஸானது ஜெயம் ரவியின் "சகலகலாவல்லவன்".. ரசிகர்களின் டிவிட்டுகளைப் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோமியோ ஜூலியட் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் சகலகலாவல்லவன். த்ரிஷா, அஞ்சலி என 2 நாயகிகளுடன் சூரியையும் கைகோர்த்து இந்த முறை களமிறங்கியிருக்கிறார் ஜெயம் ரவி.

அப்பாடக்கர் என முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் பின்பு சகலகலா வல்லவன் என பெயர் மாறியது, இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் நன்றாக இருப்பதாக மீடியாக்கள் விமர்சித்துள்ளன.


ரசிகர்களும் இந்தப் படம் நன்றாக இருப்பதாக கருத்துத் தெரிவித்து உள்ளனர், சமூக வலைதளங்களில் படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.


ரசிகர்களின் பதிவுகளில் இருந்து சில ட்வீட்களை இங்கு நாம் காணலாம்.


அடுத்தடுத்து வெற்றிகள் - சுருதிஹாசன் ரசிகர்

ரோமியோ ஜூலியட்டை தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் சகலகலாவல்லவன் திரைப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைப் பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது தொடர்ந்து பெரிய வெற்றிகளைக் கொடுத்து வரும் ரவி அண்ணாவிற்கு, வாழ்த்துக்கள் என்று சுருதிஹாசன் ரசிகர் என்பவர் கருத்துத் தெரிவித்து உள்ளார்.


காமெடி மொக்கை பாஸ் - சரவணன்

எஸ்எஸ் சந்திரன், ஒய்ஜி மகேந்திரன் வரிசையில் மொக்க காமெடியனாக மாறியிருக்கிறார் சூரி , காமெடி சரியில்லை என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் சரவணன்.


கொலைவெறி - ராஜ்

"சகலகலாவல்லவன் படத்தைப் பார்த்த பிறகு சூரி, சுராஜ், அஞ்சலி இவர்கள் மூவர் மீதும் கொலைவெறியில் இருப்பார்கள் ரசிகர்கள் " என்று ராஜ் என்னும் ரசிகர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.


சுந்தர்சியை பின்பற்றும் சுராஜ்

சுந்தர் சியின் படங்களில் தான் பெண்களைப் பற்றி அதிகம் அறியமுடியும் தற்போது இயக்குநர் சுராஜும் அவரை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் என்று பூங்குன்றன் செல்வராஜ் தெரிவித்து இருக்கிறார்.


சோதனை முயற்சி - ஆர்யா விஜய்

முதல் பாதி மிகவும் ஓய்ந்து போனதுபோல உள்ளது, அஞ்சலியின் கவர்ச்சி மற்றும் சூரியின் காமெடியை மிகவும் நம்பி இருக்கின்றது படக்குழு" மொத்தத்தில் சகலகலாவல்லவன் சோதனை முயற்சி என்று ஆர்யா விஜய் என்னும் ரசிகர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.


இன்னுமொரு சுராஜ் படம் - சதீஷ்

சகலகலாவல்லவன் இன்னுமொரு சுராஜ் படம், காமெடி மற்றும் ஹீரோயின் எல்லாமே சோதனை முயற்சி என்று கூறியிருக்கிறார் சதீஷ் என்னும் ரசிகர்.


பேர் வைக்கிறதுல இவ்ளோ கஷ்டமா - திலீபன்

முதல்ல மாஸ் இப்போ சகலகலாவல்லவன் சொந்த சரக்குக்கு பேர் வைக்கிறது இவ்ளோ கஷ்டமா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார் திலீபன் என்னும் ரசிகர்.


English summary
SakalakalaVallavan Movie Getting positive Reviews in Social Medias.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil