»   »  படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தீபிகாவுடன் 2 மணிநேரம் பேசிய சல்மான்

படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தீபிகாவுடன் 2 மணிநேரம் பேசிய சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான் நடிகை தீபிகா படுகோனேவை சந்தித்து பேசியதால் விளம்பர படத்தின் படப்பிடிப்பு இரண்டு மணிநேரம் தாமதமானதாம்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், தீபிகா படுகோனேவும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் இருவரும் பொது இடங்களில் பார்த்தால் நண்பர்களை போன்று சிரித்துப் பேசி பழகுவார்கள்.

சல்மான் கானின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மட்டும் அதை தீபிகா ஏற்பது இல்லை.

சல்மான் கான்

சல்மான் கான்

சல்மானின் புதுப்படம் துவங்கும் போது எல்லாம் தீபிகாவிடம் கேட்பார்கள் அவரும் முடியாது என்பார். கேட்டால் கதை சரியில்லை, கதாபாத்திரம் சரியில்லை என்று தொடர்ந்து ஏதாவது காரணம் கூறி வருகிறார்.

விளம்பரப் படம்

விளம்பரப் படம்

சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரை வைத்து விளம்பரப் படம் ஒன்றை படமாக்கியுள்ளனர். அப்போது யாரோ தீபிகா படுகோனேவும் இதே ஸ்டுடியோவில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தீபிகா

தீபிகா

தீபிகா அதே ஸ்டுடியோவில் இருப்பது குறித்து அறிந்த சல்மான் கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை பார்க்க சென்றுவிட்டார். இருவரும் ஜாலியாக இரண்டு மணிநேரம் பேசியுள்ளனர்.

தாமதம்

தாமதம்

சல்மான் கானும், தீபிகாவும் சந்தித்து பேசியதால் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு 2 மணிநேரம் தாமதமாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் சொல்வது தெரியாமல் அமைதியாக காத்திருந்துள்ளனர்.

English summary
Salman Khan's ad shoot got delayed by 2 hours as he went to meet Deepika Padukone who was also on the same studio as him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil