»   »  ராஜமௌலி இயக்கத்தில் நான் 'ஈ'யாக மாறும் சல்மான் கான்?

ராஜமௌலி இயக்கத்தில் நான் 'ஈ'யாக மாறும் சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் ஈ இரண்டாவது பாகத்தில் சல்மான்கான் நடிப்பதை, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் உறுதி செய்திருக்கிறார்.

கடந்த 2012 ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட படம் நான் ஈ.ஒரு ஈயை வைத்து வித்தியாசமாக கதை சொல்லி நல்ல கலெக்ஷனையும், 2 தேசிய விருதுகளையும் ஒருசேரக் கைப்பற்றினார் ராஜமௌலி.

Salman Khan in Eega Part 2?

சொல்லப் போனால் இன்றைய பாகுபலி பட்ஜெட்டுக்கு முன்னோட்டம் என்றும் நான் ஈ படத்தைக் கூறலாம். மேலும் ராஜமௌலியின் முதல் நேரடித் தமிழ்ப்படமாகவும் நான் ஈ அமைந்தது.

இந்நிலையில் 'நான் ஈ' படத்தின் கதையாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் 'நான் ஈ' 2 வது பாகத்தில் சல்மான்கான் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. எனினும் முதல் பாகத்தை இயக்கிய ராஜமௌலியே 2 வது பாகத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் கானுக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்த பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையாசிரியர், விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
"Salman Khan Plays a Hero in Eega 2" Rajamouli's Father Vijayendra Prasad Confirmed in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil