»   »  3 பாடிகார்டுகளை வீட்டுக்கு அனுப்பிய சல்மான் கான்: காரணம் 'சல்லுலீக்ஸ்'

3 பாடிகார்டுகளை வீட்டுக்கு அனுப்பிய சல்மான் கான்: காரணம் 'சல்லுலீக்ஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பாடிகார்டுகளில் மூன்று பேரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது டியூப்லைட் மற்றும் டைகர் ஜிந்தா ஹை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டைகர் ஜிந்தா ஹை படத்தில் சல்மானுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலி கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

சல்மான் எங்கு சென்றாலும் பாடிகார்டுகளுடன் தான் செல்வார்.

மீடியா

மீடியா

அண்மை காலமாக சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விபரங்கள் மீடியாக்களுக்கு லீக்காகிக் கொண்டிருந்தது. இந்த தகவல் எல்லாம் மீடியாவுக்கு எப்படி கிடைக்கிறது என்று வியந்தார் சல்மான்.

பாடிகார்டுகள்

பாடிகார்டுகள்

நம்முடன் உள்ள யாரோ தான் மீடியாவுக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்று சந்தேகம் அடைந்த சல்மான் அது தனது பாடிகார்டுகள் தான் என்பதை கண்டுபிடித்தார்.

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

என்கிட்டேயே சம்பளம் வாங்கிக்கிட்டு என் வீட்டு விஷயங்களையா வெளியே விடுகிறீர்கள் என்று கோபம் அடைந்த சல்மான் தனது பாடிகார்டுகளில் 3 பேரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.

ஷெரா

ஷெரா

ஷெரா என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சல்மான் கானின் பாடிகார்டாக உள்ளார். அவரை மட்டும் சல்மான் டிஸ்மிஸ் செய்யவில்லை. சல்மானை ஷெரா கடவுளாக பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Salman Khan has dismissed three of his bodyguards after they leaked his personal information to the media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil