»   »  சல்மானுக்கு ஆதரவாக ட்வீட்டு போட்டு சோனாக்ஷியிடம் திட்டு வாங்கிய பாடகர்

சல்மானுக்கு ஆதரவாக ட்வீட்டு போட்டு சோனாக்ஷியிடம் திட்டு வாங்கிய பாடகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சாலையோரம் படுத்து தூங்குபவர்களை நாய் என்று கூறி சல்மான் கானுக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாலிவுட் பாடகர் அபிஜித்தை நடிகர் ரிஷி கபூர், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் விளாசியுள்ளனர்.

குடிபோதையில் காரை ஏற்றி சாலையோரம் படுத்திருந்தவர்களில் ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் பாடகர் அபிஜித் ட்விட்டரில், நாய் போன்று தூங்கினால் நாய் மாதிரி தான் இறக்க வேண்டும் என்று சல்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதை பார்த்த பலரும் அவரை விளாசித் தள்ளியதால் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.

சல்மான்

சாலைகள் கார்களுக்கும், நாய்களுக்கும் தான். மக்கள் அங்கு தூங்குவதற்கு அல்ல..@BeingSalmanKhan மீது தவறே கிடையாது...@arbaazSkhan @sonakshisinha
என்று அபிஜித் ட்வீட் செய்திருந்தார்.

சோனாக்ஷி

என் நண்பரை ஆதரிக்கிறேன். ஆனால் இதுபோன்ற பேச்சுகளை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். அபிஜித் உங்களின் ட்வீட்களில் என்னை தயவு செய்து டாக் செய்யாதீர்கள் என்று சோனாக்ஷி சின்ஹா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரிஷி

சல்மானுக்கு ஆதரவாக பேசி சிங்கியடிக்க விரும்புகிறார்கள். நானும் சல்மானின் நலம் விரும்பி தான் ஆனால் கொஞ்சமாவது லாஜிக்குடன் பேசுங்கள் என்று நடிகர் ரிஷி கபூர் கூறியுள்ளார்.

உண்மை

என் ட்வீட்கள் கசப்பாக இருக்கும் ஆனால் அது உண்மை.. சாலையோரம் படுத்து தூங்குவது ரிஸ்க் என்று தெரிந்தும் தூங்குகிறார்கள்...இது யார் தவறு
@BeingSalmanKhan என்று கேட்டுள்ளார் அபிஜித்.

மன்னிப்பு

மன்னிப்பு

அபிஜித்தை பிரபலங்கள், மக்கள் என பலரும் விளாசித் தள்ளியதையடுத்து அவர் அப்படி ட்வீட் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Rishi Kapoor and actress Sonakshi Sinha blasted singer Abhijeet for tweeting insensitively.
Please Wait while comments are loading...