நடிகை பூஜாவுக்கு உதவிய சல்மான் கான்- வீடியோ
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் போலியாக நடிக்கத் தெரியாதவர் என்கிறார் பிரபுதேவா.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கெரியர் அடிவாங்கிக் கொண்டிருந்தபோது 2009ம் ஆண்டு அவரை வைத்து வான்டட் படத்தை இயக்கினார் பிரபுதேவா. பிரபுதேவா இயக்கிய முதல் பாலிவுட் படமான வான்டட் சூப்பர் ஹிட்டானது.
அதில் இருந்து சல்மான் கானின் கெரியர் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் சல்மான் கானை மீண்டும் இயக்க உள்ள பிரபுதேவா கூறியிருப்பதாவது,
சல்மான்
சல்மான் கானுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். முதலில் நாங்கள் வேலை பார்த்தபோது அவ்வளவாக பேசியது இல்லை. அதன் பிறகே பேசத் துவங்கினோம். பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.
உண்மை
திரையுலகில் சல்மான் போன்று உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது. திரையுலகில் உள்ள பலர் போன்று அவர் நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர்.
ரஜினி
சல்மான் அன்பானவர். அவர் கடின உழைப்பாளி. அவர் பல விஷயத்தில் ரஜினி சார் போன்றவர். இருவருக்கும் என்று தனி ஸ்டைல் உள்ளது. அது அனைவருக்கும் பிடிக்கும்.
முயற்சி
சல்மான் கான் யாரையும் இம்பிரஸ் செய்ய முயற்சிக்க மாட்டார். இருப்பினும் நாம் இம்பிரஸ் ஆகிவிடுவோம். அவரை வைத்து தபாங் 3 படத்தை எடுக்கிறேன். இது பெரிய படம் என்று எனக்கு தெரியும் என்றார் பிரபுதேவா.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.