ஐஸ்வர்யா ராய்க்காக விவேக் ஓபராய்யை மிரட்டிய சல்மான் கான்... இன்னும் ஓயாத காதல் சர்ச்சை!
மும்பை: உலக அழகியான ஐஸ்வர்யா ராய் 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், இந்தியில் ஹம் தில் தே சுகே சனம், தால் உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்ப் பெற்றார்.
இந்நிலையில், ஹம் தில் தே சுகே சனம் படத்தில் நடித்த போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் காதலில் விழுந்தார்.
சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் காதல் பாலிவுட்டில் பெரும் புயலை வீசிய நிலையில், தற்போதும் அதுகுறித்த சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவள் உலக அழகியே
1994ல் நடபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், 1997 முதல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் நாய்கியாக அறிமுகமானவர் தொடர்ந்து ஜீன்ஸ், சல்மான் கானுடன் வஹம் தில் தே சுகே சனம் உட்பட பல படங்களில் நடித்து புகழ்ப் பெற்றார். ஹம் தில் தே சுகே சனம் படத்தில் நடித்தபோது சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் இடையே காதல் ஏற்பட்டது. முன்னதாக மாடலிங் செய்துவந்த போது ராஜுவ் முல்ஷாந்தானி என்பவரை காதலித்ததாகவும் சொல்லப்பட்டது.

அபிசேக் பச்சனுடன் திருமணம்
சல்மான் கானை காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய், ஒரு கட்டத்தில் அவரது டார்ச்சர் தாங்காமல் பிரேக் அப் செய்தார். இரண்டு வருடங்களில் சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் காதல் முடிவுக்கு வந்தது. இதற்கு சல்மான் கானின் கோபமும், பிடிவாதமும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா பிரிந்து சென்றதால் ஷூட்டிங் ஸ்பாட் முதல் வீடு வரை சென்று சல்மான் கான் டார்ச்சர் செய்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. இதனையடுத்து 2007ல் தன்னைவிட மூன்று வயது குறைந்த அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

இன்னும் விடாத சர்ச்சை
மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்த போது தான் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். முன்னதாக சல்மான் கானை பிரேக் அப் செய்திருந்த போது chalte chalte என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட் வரை சென்று பிரச்சினை செய்துள்ளார் சல்மான் கான். அதுமட்டும் இல்லாமல் சல்மான் கானை பிரேக் அப் செய்த பின்னர் விவேக் ஓபராய்யை ஐஸ்வர்யா ராய் காதலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது விவேக் ஓபராய்யை சல்மான் கான் மிரட்டியது தெரியவந்துள்ளது.

விவேக் ஓபராய்க்கு மிரட்டல்?
ஐஸ்வர்யா ராய் தன்னை பிரேக் அப் செய்ய விவேக் ஓபராய் தான் காரணம் என சல்மான் கான் கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் விவேக் ஓபராய்யை தனியாக வரவைத்து கொலை செய்துவிடுவேன் என சல்மான் கான் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்யை விட்டு விலகிட வேண்டும் என சல்மான் கான் அவரை கடுமையாக மிரட்டியதாகவும், அதனால் தான் விவேக் ஓபராய் காதலும் உடனே பிரேக் அப் ஆனதாகவும் இப்போது செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











