»   »  வாயை கொடுத்து சுல்தானுக்கு ஆப்பு வைத்த சல்மான்.. சத்தமின்றி சாதித்த ரஜினி

வாயை கொடுத்து சுல்தானுக்கு ஆப்பு வைத்த சல்மான்.. சத்தமின்றி சாதித்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுல்தான் படம் ரிலீஸாகும் முன்பு சல்மான் கான் தேவை இல்லாமல் வாயை கொடுத்து வசூலுக்கு ஆப்பு வைத்தார். ரஜினிகாந்தோ கபாலி படத்தை விளம்பரம் செய்யாமலேயே வசூல் சக்கை போடு போடுகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி சல்மான் கானின் சுல்தான் படம் ரிலீஸானது. படம் என்னவோ ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் வசூல் வேட்டை தொடர்கிறது.


ரஜினிகாந்தின் கபாலி படம் ரிலீஸாகும் வரை சுல்தான் தான் பாக்ஸ் ஆபீஸ் ராஜாவாக இருந்தது.


பலாத்கார கருத்து

பலாத்கார கருத்து

சுல்தான் படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். ஒரு காட்சிக்காக மெனக்கெட்டது குறித்து கூறுகையில், நான் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று வலியை உணர்ந்தேன், நேராக நடந்து செல்ல முடியவில்லை என்று கூறினார்.
ஆப்பு

ஆப்பு

சுல்தான் படம் ரிலீஸாக இருந்த நிலையில் சல்மான் கான் பலாத்கார கருத்து தெரிவித்து அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சல்மானை வெச்சு செஞ்சனர்.


வசூல் பாதிப்பு

வசூல் பாதிப்பு

சுல்தான் ரிலீஸ் நேரத்தில் சல்மான் தேவையில்லாத பேச்சு பேசியது அவரது படத்தின் வசூலை பாதித்ததாக கூறப்படுகிறது. வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பாலிவுட்டில் புதிய சாதனை எல்லாம் படைத்துள்ளது சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினி

ரஜினி

சல்மான் சுல்தானை விளம்பரப்படுத்த ரஜினியோ கபாலி ரிலீஸுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார். வழக்கம் போன்று அவர் இந்த படத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. அவர் விளம்பரப்படுத்தாமலேயே வசூல் சூப்பராக உள்ளது. அது தான் ரஜினி மேஜிக்.
English summary
Salman Khan's rape comment has reportedly affected the business of Sultan, while Rajini kept quiet before Kabali release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil