»   »  தங்கமகன், வடசென்னையைத் தொடர்ந்து... 3 வது முறையாக தனுஷுடன் ஜோடி போடும் சமந்தா

தங்கமகன், வடசென்னையைத் தொடர்ந்து... 3 வது முறையாக தனுஷுடன் ஜோடி போடும் சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க மகன், வட சென்னையைத் தொடர்ந்து 3 வது முறையாக தனுஷுடன் ஜோடி சேரவிருக்கிறார் நடிகை சமந்தா.

சமந்தா முதன்முறையாக தனுஷுடன் இணைந்து நடித்த தங்க மகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி மாறனின் வட சென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து சமந்தா நடிக்கவிருக்கிறார்.


Samantha Joins with Dhanush for the 3rd Time

இந்நிலையில் தற்போது 3 வது முறையாக தனுஷுடன் இணைந்து சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குவார் என்றும், விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தங்க மகன் திரைப்படத்தில் சமந்தா தனுஷின் மனைவியாக நடித்து இருக்கிறார். இப்படம் நாளை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.


வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க மகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் தனுஷ் - சமந்தா இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்புப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.


சமந்தா தற்போது விஜய்யுடன் தெறி படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து தமிழில் குவியும் படங்களால் தமிழின் முன்னணி நாயகியாக மாறத் தொடங்கியிருக்கிறார் சமந்தா.

English summary
After Thanga Magan, Vada Chennai Now Samantha Joins with Dhanush for the 3rd Time. The Official Announcement of this Film will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil