சமந்தாவின் பக்காவான பாலிவுட் அறிமுகம்.. அதுவும் இந்த பிரபல நடிகர் படத்திலா? தீயாய் பரவும் தகவல்!

மும்பை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை சமந்தா. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடல் மூலமாகவும் இந்தி பெல்ட்டில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

தொடர்ந்து மும்பையில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா எந்த பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகப் போகிறார் என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இதுவரை மெளனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் பக்காவாக என்ட்ரி கொடுக்கப் போகிறார் சமந்தா என்கிற ஹாட்டான தகவல்கள் வெளியாகி உள்ளன.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், தற்போது பாலிவுட்டில் சமந்தாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இரண்டாம் பாகத்தில் ராஜி எனும் விடுதலைப் போராட்ட வீராங்கனையாக சமந்தா நடித்து மிரட்டி இருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் ஒரு டஜனுக்கும் மேலான வாய்ப்புகள் குவிந்த நிலையில், சமந்தா தனக்கு சரியான தேர்வை தேர்ந்தெடுத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஷாருக்கான் படத்தில் நயன்தாரா

ஷாருக்கான் படத்தில் நயன்தாரா

தென்னிந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்த நயன்தாரா மற்றும் சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் கண் வைத்துள்ளனர். இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரம்மாண்டமாக பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக உள்ளார். எந்தவொரு வெப் தொடரிலும் தலை காட்டி இந்தி ரசிகர்களை கவராத நிலையிலும், ஷாருக்கான் படத்தில் லான்ச் ஆகிறார் என்பதே பெரிய் விஷயமாக பார்க்கப்படுகிறது.

அக்‌ஷய் குமார் படத்திலா

அக்‌ஷய் குமார் படத்திலா

அதற்கு இணையான ஒரு கிராண்ட் லாஞ்சை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ள சமந்தா கரண் ஜோஹர் தயாரிப்பில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள படத்தில் அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டன. ஆனால், தற்போது, அதற்கு முன்னதாக மற்றொரு பாலிவுட்டின் திறமையான நடிகர் படத்தில் தான் சமந்தா அறிமுகமாக போகிறார் என்கிற ஸ்ட்ராங் பஸ் சினிமா வட்டாரத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆயுஷ்மான் குரானா படத்தில் தான்

ஆயுஷ்மான் குரானா படத்தில் தான்

பாலிவுட் திரையுலகமே தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து நடித்து வரும் நிலையில், ஆயுஷ்மான் குரானா புதிய கதைகளை தேர்வு செய்து நடித்து, அந்த படங்களை தென்னிந்திய சினிமாக்கள் ரீமேக் செய்யும் விதமாக உள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாக உள்ள சூப்பர் படத்தில் தான் சமந்தா அறிமுகமாக போகிறார் என்கிற ஹாட்டான தகவல் கிடைத்துள்ளது. தினேஷ் விஜன் இயக்கத்தில் உருவாக உள்ள அந்த படத்தில் சமந்தாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம்.

Recommended Video

Samantha Tweet | வேலைய பாத்துட்டு போகணும்... *Celebrity | Filmibeat Tamil
தளபதி 67

தளபதி 67

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கடைசியாக சமந்தா நடித்திருந்தார். டோலிவுட்டில் சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா மற்றும் குஷி என மூன்று படங்கள் உருவாகி வருகின்றன. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 67 படத்திலும் சமந்தா தான் ஹீரோயின் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X