’சாம்ராட் பிரித்விராஜ்‘ படத்திற்கு குவைத், ஓமனில் தடை.. என்ன காரணம் ?

மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படத்திற்கு குவைத், ஓமனில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சாம்ராட் பிரித்விராஜ் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாம்ராட் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

பிரித்விராஜின் மனைவியாக முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லர் இப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

சாம்ராட் பிரித்விராஜ் படத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, சாக்ஷி தன்வார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

வரி விலக்கு

வரி விலக்கு

வரலாற்று பின்னணி கொண்ட இப்படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படத்திற்கு திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 தடை

தடை

சமீபகாலமாக இந்திய திரைப்படங்களுக்கு குவைத் மற்றும் ஓமனில் தடைவிதித்து வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'குருப்' திரைப்படத்திற்கும், விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ராஜ்புத் மன்னரான பிரித்விராஜ் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு உருவான சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இஸ்லாமிய மன்னர்களின் பெயரும், மிரட்டலான போர் காட்சிகளும் இருப்பதால் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இளம் தலைமுறையினருக்கு

இளம் தலைமுறையினருக்கு

kஇந்தியாவின் வீரமிகு மன்னர்களில் ஒருவரான சாம்ராட் பிரித்விராஜ் சௌகானை கொண்டாடும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையான வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் வரலாறு சென்று சேர வேண்டும் என்பதற்காக பெரும் பொரும்செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Read more about: samrat prithviraj banned
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X