twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    " விரைவில் ஓட்டுநராக புது அவதாரம் எடுக்க போறாரு சமுத்திரக்கனி "

    |

    சென்னை : சமூக அக்கறை மிக்க படங்களை இயக்கும் இயக்குனர்களில் முன்னிலை வகிக்கும் சமுத்திரக்கனி டாக்ஸி ஓட்டுநர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி நடிக்கவும் உள்ளார்.

    பன்முக வித்தகர் :

    பன்முக வித்தகர் :

    இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட திறமையாளர் சமுத்திரக்கனி. அவரின் படங்கள் ஒவ்வொன்றும் சமூக அக்கறையோடு இருப்பது அவர் சமுதாயத்தின் மீதும் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

    கிங் ஆப் அட்வைஸ் :

    கிங் ஆப் அட்வைஸ் :

    சமுத்திரக்கனி இயக்கும் படங்களாக இருக்கட்டும் அல்லது அவர் நடிக்கும் படங்களாக இருக்கட்டும் அனைத்திலுமே அவரது அட்வைஸ் நிச்சயம் இருக்கும். அட்வைஸ் கொடுப்பவர்கள் யாராக இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பு தான் மிஞ்சும். ஆனால் சமுத்திரக்கனி கொடுக்கும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்த கூடியதாகவும், யதார்த்தமான உண்மையான அறிவுரைகளாக இருப்பதால் அவரின் படங்கள் என்றுமே வெற்றி தான்.

    டாக்ஸி ஓட்டுநர்களை ஆட்டுவிக்கும் அரக்கன் :

    டாக்ஸி ஓட்டுநர்களை ஆட்டுவிக்கும் அரக்கன் :

    தற்போது சமுத்திரக்கனி ஓட்டுநர் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் உள்ளார். இன்று மக்களிடையே பயணம் என்ற வார்த்தையை கேட்டாலே உடனே ஓலா, உபர் புக் பண்ணு என்ற வார்த்தையை தான் கேட்கிறோம்.

     ஆப் கள் :

    ஆப் கள் :

    ஒரு ஆப் எப்படி ஓட்டுநர்களை ஆட்டுவிக்கிறது, அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் தான் இப்படத்தின் மைய கதை. வளர்ந்து வரும் ஐ. டி நிறுவனங்கள் இந்த ஓட்டுநர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் கஷ்டப்படுத்துகிறார்களா அல்லது உண்மையிலேயே உதவுகிறார்களா என்பது தான் ஓட்டுநர் கதை.

    இது போன்ற கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பலரிடம் சர்வே எடுத்தும், பல நாட்கள் அவர்களின் டாக்ஸியில் பயணம் மேற்கொண்டும் பல தகவல்களை சேகரித்துள்ளனர் இப்படக்குழுவினர்.

    கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டவிடாமல் அபராதம் :

    கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டவிடாமல் அபராதம் :

    பல டாக்ஸிகளில் பயணம் மேற்கொள்ளும் போது பல கேள்விகள் ஓட்டுநர்களிடம் கேட்கப்பட்டு அவர்களின் நிலைமையை பற்றி தெரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக நிறுவனங்களின் கமிஷன் என்ன? ஓட்டுநர்களுக்கு கொடுக்கும் கமிஷன் என்ன? வாடிக்கையாளரை பிக் அப் அல்லது ட்ராப் செய்ய தாமதமானால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது, ஓலா மணி மூலம் ஓட்டுநர்களுக்கு எத்தனை நாட்களுக்கு பிறகு அவர்களின் தொகை வழங்கப்படுகிறது போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்து கொண்டனர்.

    பிழைப்பு தேடி சென்னைக்கு பயணம் :

    பிழைப்பு தேடி சென்னைக்கு பயணம் :

    கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் விவசாயம் கைகொடுக்காததால் சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறது. இங்கு வந்து ஓட்டுநராக பணிபுரிந்து சொந்தமாக ஒரு டாக்ஸியை வாங்கி தனது சொந்த வாகனத்தையே தன்னுடைய விருப்படி இயக்க முடியாமல் ஒரு ஆப் பின் இஷ்டப்படி எப்படி ஒரு தனி மனிதனை ஆட்டுவிக்கிறது. கடைசியாக அந்த ஓட்டுநர் தன்னுடடைய கார் கடன் தவணையை கட்ட முடியாமல் காரை இழக்க உள்ள நிலையில் அவரின் கார் யாருடைய கைக்கு மாற்றப்படுகிறது என்று மிகவும் எதார்த்தமான ஒரு ஓட்டுநரின் வாழ்கை பின்னணியை அப்படியே படம் பிடித்து கட்ட உள்ளது சமுத்திரக்கனியின் ஓட்டுநர் திரைபடம்.

    அரசாங்கத்தின் தலையீடு அவசியம் :

    அரசாங்கத்தின் தலையீடு அவசியம் :

    ஓலா, உபர் போன்ற பயண சேவைகள் சென்னையில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் பல பெயர்களில் ஓட்டுனர்களின் ரத்தத்தை உறுஞ்சுகிறார்கள். இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் தான் ஏதாவது ஒரு தீர்வு கொண்டுவரவேண்டும். அவர்கள் இந்த டாக்ஸி சேவையை காண்ட்ராக்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு முறையில் எடுத்துக்கொண்டு ஓட்டுநர்களுக்கு ஒரு விடிவு காலத்தை இந்த அநியாய ஐ. டி நிறுவனங்களிடம் இருந்து பெற்று தர முன்வர வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்கப்போவது போன்ற ஒரு சமூக அக்கரை கொண்ட திரைப்படமாக ஓட்டுநர் திரைப்படம் அமைய போகிறது.

    உணர்ச்சிகளின் விளிம்பு :

    உணர்ச்சிகளின் விளிம்பு :

    சமுத்திரக்கனியின் ஒவ்வொரு படத்திலும் அட்வைஸ் இருப்பது போல் எமோஷன், செண்டிமெண்ட், யதார்த்தம் என அனைத்தும் ஒரு கலவையக இருக்கும். வித்யாசமான, சமூக அக்கறை கொண்ட யதார்த்தமான படம் எடுப்பதில் சமுத்திரக்கனிக்கு 100/100 மார்க். அவரின் படங்களில் உணர்ச்சிகள் உச்சக்கட்ட விளிம்பில் நம்மை தாக்கும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

    வில்லனாக சமுத்திரக்கனி :

    வில்லனாக சமுத்திரக்கனி :

    ஓட்டுநர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். குணச்சித்திர நடிகராகவோ அல்லது முக்கிய கதாபாத்திரமாகவோ நடித்தாலும் அட்வைஸ் கொடுக்கிறார் என்ற இமேஜ் மாற வேண்டும் என்பதற்காகவே சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஓட்டுநர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். குணச்சித்திர நடிகராகவோ அல்லது முக்கிய கதாபாத்திரமாகவோ நடித்தாலும் அட்வைஸ் கொடுக்கிறார் என்ற இமேஜ் மாற வேண்டும் என்பதற்காகவே சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    உரக்க உரைக்கும் உத்தமன் :

    உரக்க உரைக்கும் உத்தமன் :

    இயக்குனராக அவர் ஒரு படத்தை எடுக்க போகிறார் என்றால் நிச்சயம் அட்வைஸ் தவிர்க்கமுடியாதது. இருப்பினும் அவர் சொல்லவரும் அறிவுரையை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும், உரக்கமாக உரைப்பதில் அஞ்சாதகவர் சமுத்திரக்கனி. படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Director samuthirakani is to direct a film based on the issues and problems faced by ola and uber drivers. Samuthirakani well known for featuring social problems in a stronger manner. He is playing a dual role as director and lead male role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X