For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சம்பவங்கள் நடத்தப்படுகிறது நாம் அதில் பயணிக்கிறோம்...சமுத்திரக்கனியின் வெற்றி சம்பவங்கள்

  |

  சென்னை : வினோதய சித்தம் படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்து பக்கா பிளானிங் செய்து வெற்றியும் பெற்று உள்ளார் கனி . அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும். சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி,முனீஸ்காந்த்,ஜெயப்பிரகாஷ்,இயக்குனர் பாலாஜி மோகன்,ஹரிகிருஷ்ணன் , அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

  ZEE5 யின் " விநோதய சித்தம்" திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது.

  தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் சமுத்திரகனி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் . அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் ஓடிடி தளமாக ZEE5 மாறியுள்ளது.

  காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்.. 6 ஆண்டு காதலை கொண்டாடும் விக்கி - நயன்.. வைரலாகும் 'ரகசிய' போட்டோஸ்! காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்.. 6 ஆண்டு காதலை கொண்டாடும் விக்கி - நயன்.. வைரலாகும் 'ரகசிய' போட்டோஸ்!

  நடிகர் சந்தானம் நடித்த " டிக்கிலோனா" திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. "விநோதய சித்தம்" என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

  வித்தியாசமான படைப்புகளை

  வித்தியாசமான படைப்புகளை

  மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India கூறியதாவது.'தரமான படங்களை தருவதே எங்கள் ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்'. சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,'எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. என்று கூறினார்

  வெற்றிச்சம்பவம்

  வெற்றிச்சம்பவம்

  நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது... 'சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் "விநோதய சித்தம்". காலத்திற்கு நன்றி'. தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது .

  குடும்ப ரசிகர்கள்

  குடும்ப ரசிகர்கள்

  படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான, ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது. இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் 'விநோதய சித்தம்' திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.

  Recommended Video

  எனக்கே இந்த படம் பிரமிப்பை தருகிறது | Director Samutirakani | Vinodhaya Sitham | Filmibeat Tamil
  கண்ணீர் விட்டு அழுது

  கண்ணீர் விட்டு அழுது

  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறியது போல இந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள் என்று அபிராமி ராமநாதன் பல மீடியா நண்பர்களிடம் தொடர்ந்துசொல்லி வருகிறார் . நிச்சயம் 2021-ல் வெளியான பல படங்களில் வினோதய சித்தம் பல விருதுகளை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது .

  English summary
  Samuthirakani’s Vinodhaya Sitham Movie Success Reasons
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X