Just In
- 1 hr ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 2 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
- 4 hrs ago
ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 4 hrs ago
‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்'... புதிய மெகா வெப் சீரிஸ்!
Don't Miss!
- Automobiles
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
- News
விறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 57வது எபிசோடில் நடிகையும் சீனியர் மாடலுமான சம்யுக்தா அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
வர வர சன் டே எபிசோடு தேவையில்லாத ஆணியாகவே மாறி வருகிறது.
முன் கூட்டியே ஷூட்டிங் எடுப்பதால், யார் எலிமினேட் ஆனார்கள் என்கிற ரகசியத்தை வெளியிட்டு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை சுத்தமாக மட்டுப்படுத்தி விடுகின்றனர்.
குறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல? நல்ல பாடம்!

திக் திக் இல்லை
இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆகப் போறாங்க என்பதை வெள்ளிக்கிழமை இரவு ஷூட்டிங் முடிந்த உடனே சமூக வலைதளங்களில் கசிய விட்டு விடுகின்றனர். சனிக்கிழமையே எல்லா ரசிகர்களுக்கும் யார் வெளியேறுகிறார் என்பது தெரிந்து விடுவதால், ஞாயிற்றுக் கிழமை எபிசோடை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும். யார் எலிமினேட் ஆகப் போறாங்க என்கிற அந்த திக் திக் மொமன்ட் ரொம்பவே மிஸ் ஆகுது.

இறுதியில் மூன்று பேர்
இந்த வாரம் முழுவதும் நல்லா சண்டை போட்ட பாலா, ஆரி, சனம் ஷெட்டி எல்லாரையும் கமல் சேவ் பண்ணார். நல்லா பேசினீங்க என சொல்லி சோமசேகரை சேவ் பண்ணார். கடைசியாக ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் டாப்புள் கார்டு மூலமாக நாமினேட் ஆன சம்யுக்தா ஆகிய மூன்று பேர் இருந்தனர்.

எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்
எவிக்ஷன் ஃப்ரீ பாஸை கொண்டு வந்து ஆஜீத்தை சேவ் பண்ண பிக் பாஸ், டாப்புள் கார்டை கொண்டு வந்த சம்யுக்தாவை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. இதில், அனிதா சம்பத் ஒரு கருவியாகவே மட்டுமே செயல்பட்டுள்ளார் என்கிற விமர்சனங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது வழக்கம் போல வைக்கப்பட்டு வருகிறது.

நிஷா சேவ்
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான நிஷாவை முன்னதாக கமல் சேவ் பண்ணிட்டார். அர்ச்சனா அக்கா சொன்ன அன்பு கடைசியாக ஜெயித்தே விட்டது. இன்னும் எத்தனை வாரத்துக்கு இந்த பிக் பாஸ் வீட்டில், இருக்கப் போகிறதோ அந்த அன்பு என்று தான் தெரியவில்லை. அர்ச்சனா கேங்கிற்கு நிஷா சேவ் ஆனது ரொம்ப சந்தோஷம். அதை விட பாலாவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

ரமேஷ் ரொம்ப ஹேப்பி
நிஷா சேவ் ஆனதும், நாம தான் இந்த வாரம் வெளியே போகப் போறோம் என ரொம்பவே அப்செட்டாக இருந்த ரம்யா, சோகமயமாக காணப்பட்டார். எப்போ வேணா அனுப்புங்க, எனக்கு ஒரு கவலையும் இல்லை. வச்சிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் நாள் பெட் போட்டு தூங்கப்போறேன் என சிரித்துக் கொண்டே ரொம்ப ஹேப்பியாக இருந்தார் ரமேஷ்.

சம்யுக்தா வெளியேற்றம்
முன்னதாகவே லீக் ஆன தகவல் போலவே சம்யுக்தா தான் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். இப்படி பிக் பாஸ் எலிமினேஷன் காத்துப் போன பலூன் ஆகிவிட்டதே, வேற ஏதாவது ஐடியா பண்ணி யார் வெளியே போனாங்கன்னு தெரியாம பார்த்துக்கோங்க பிக் பாஸ் டீம் என்றும், லீக் பண்ணாதீங்க பார்க்கவே போர் அடிக்குதுன்னு ரசிகர்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.