Just In
- 3 min ago
சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
- 34 min ago
ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!
- 1 hr ago
கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
Don't Miss!
- News
நான் ரெடி.. நீங்க ரெடியா.. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓபிஎஸ் இளைய மகன் சவால்
- Automobiles
2 விதமாக பயன்படுத்திக்கலாம்! இந்தியாவில் அறிமுகமானது வாகன பதிவு தேவைப்படாத ஒகினவா மின்சார ஸ்கூட்டர்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவில் இருந்து விலக மனைவியை கட்டாயப்படுத்தினாரா..? என்ன சொல்கிறார் பிரபல நடிகையின் கணவர்!
சென்னை: சினிமாவில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது என்று பிரபல நடிகையின் கணவர் கூறியுள்ளார்.
நடிகை சனா கான், தொழிலதிபர் முஃப்தி அனாஸ் சையத் என்பவரை கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
தம்பின்னு கூப்பிடுங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர் விட்ட பாலா.. டோட்டலாக மாறிவிட்டாரே!
திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

காஷ்மீர் ஹனிமூன்
இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்போது அவர் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார். கணவருடன் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், பின்னர் அங்கு சென்று சேர்ந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

கொட்டும் பனியில்
சில நாட்களுக்கு முன் இங்கு அதிக குளிராக இருக்கிறது, அதுதான் காஷ்மீர் என்று இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார். பின்னர் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் இருந்து கொட்டும் பனியில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

எனக்கே ஆச்சரியம்
இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாக சனா கான் எடுத்த முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது என்று அவர் கணவர் முஃப்தி அனாஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, அவரை சினிமாவில் இருந்து விலகுமாறு நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர் எடுத்த முடிவு எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

கடவுளிடம் வேண்டினேன்
அவர் மேலும் கூறும்போது, நான் சனாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். என் வேண்டுதல் அவருக்கு எட்டியது. சனாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் நான் இந்தளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

பொருத்தமற்ற ஜோடி
நடிகையை எப்படி திருமணம் செய்து கொண்டேன் என இப்போதும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் குறுகிய மனம் கொண்டவர்கள். இது என் வாழ்க்கை. இதுபற்றி மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டாம். நாங்கள் பொருத்தமற்ற ஜோடி என்று கூட சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் எவ்வளவு பிணைப்போடு இருக்கிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்' என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
நடிகை சனா கான், தமிழில், சிம்புவின் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பிரபலமானார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் பிரிந்தார்.

சேவை செய்ய
பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 'சினிமாவை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க, இந்த சேவையை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். பின்னர் அவர் தொழிலதிபர் முஃப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.