»   »  சண்டைக்கோழி 2: விஷாலுக்கு வில்லனான நடிகர் சத்யராஜ்?

சண்டைக்கோழி 2: விஷாலுக்கு வில்லனான நடிகர் சத்யராஜ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டைக் கோழி 2ம் பாகத்தில் நடிகர் சத்யராஜ், வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

விஷால் - மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2005 ம் ஆண்டில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.


இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி தற்போது அதன் 2 ம் பாகத்தை மீண்டும் எடுக்கவிருக்கிறார்.


10 வருடம் கழித்து

10 வருடம் கழித்து

10 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தப் படத்தைக் கையில் எடுக்கும் இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜை கேட்டு இருக்கின்றார் என்று முன்பு செய்திகள் வெளியாகின.


சத்யராஜை வில்லனாக்க லிங்கு ஆசை

சத்யராஜை வில்லனாக்க லிங்கு ஆசை

சண்டக்கோழி 2 வில் நடிகர் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க லிங்குசாமி மிகவும் ஆசைப்படுகிறார் என்று கூறுகின்றனர், கிட்டத்தட்ட வில்லன் சத்யராஜ் தான் என்று உறுதியாகி விட்டாலும் கூட அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


செப்டம்பரில் ஷூட்டிங்

செப்டம்பரில் ஷூட்டிங்

சண்டக்கோழி படத்தை செப்டம்பர் 9 ம் தேதி தொடங்க இருக்கின்றார் லிங்குசாமி, சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் 2 ம் பாகம் செப்டம்பர் 15 ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்க இருக்கின்றது.


சத்யராஜ் மறுத்தால்

சத்யராஜ் மறுத்தால்

பாகுபலியைக் காரணம் காட்டி ஒருவேளை சத்யராஜ் மறுக்கும் பட்சத்தில் வேறு ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


அதே அப்பாதான்

அதே அப்பாதான்

முதல் பாகத்தில் விஷாலின் அப்பாவாக நடித்த ராஜ்கிரண் இதிலும் அப்பாவாக நடிக்கிறார்.


யார் நாயகி

யார் நாயகி

நாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன, முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.


யுவனுக்குப் பதில் இமான்

யுவனுக்குப் பதில் இமான்

முதல் பாகத்தில் இசையமைத்து இருந்த யுவனுக்குப் பதில் இந்த பாகத்தில் இமானை புக் செய்திருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி.


English summary
director Lingusamy has reportedly approached Sathyaraj to play the role of villain, in his upcoming film Sandakozhi 2 with Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil