ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு ஆட முயன்ற வனிதா.. பங்கமாக கலாய்த்த சாண்டி மாஸ்டர்.. ஆரம்பமே அதகளம் தான்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. கமல்ஹாசன் க்யூட்டாக டீசர்ட் அணிந்து மீண்டும் ஹோஸ்ட் வேலையை ஆரம்பித்துள்ளார்.

முதல் போட்டியாளராக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வனிதா விஜயகுமார் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார்.

கமல்ஹாசனிடம் வனிதா விஜயகுமார் பேசி விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தார். வனிதாவின் அசத்தலான டான்ஸ் பர்ஃபார்மின்ஸில் இடையே புகுந்து சாண்டி மாஸ்டர் கலாய்த்தது வேற லெவல் ஃபன்.

சாண்டி மாஸ்டர் வந்திருக்கலாம்

சாண்டி மாஸ்டர் வந்திருக்கலாம்

காமெடிக்கு பஞ்சம் இருக்கும் அளவுக்கே இந்த பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் உள்ளனர் என்றும் சாண்டி மாஸ்டர் ஒரே ஒரு டான்ஸ் பர்ஃபார்மன்ஸ்க்கு மட்டும் வந்து சென்ற நிலையில், அவர் போட்டியாளராக இந்த அல்டிமேட்டில் கலந்து கொண்டு இருக்கலாம் என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

வனிதா அக்கா வந்தாச்சு

வனிதா அக்கா வந்தாச்சு

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா விஜயகுமார். 5வது சீசனில் இருந்த வீடா இது என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஏகப்பட்ட புதிய மாற்றங்கள் நிறைந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டார் வனிதா விஜயகுமார். ரசிகர்களின் நிலைமையும் அதே போலத்தான் இருந்தது.

கலக்கல் டான்ஸ்

கலக்கல் டான்ஸ்

சில்வர் கோட் அணிந்து கொண்டு சினிமா பாடல்களுக்கு கலக்கல் நடனமாடி வந்தார் வனிதா விஜயகுமார். வத்திக்குச்சி பத்திக்காதுடா என வத்திகுச்சி வனிதா அக்காவுக்கு ஏற்ப பாடல்களும் இசையமைக்கப்பட்டு இடையே இடையே எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் போன்ற வசனங்களையும் சொல்லி அதகளப்படுத்தினார் வனிதா விஜயகுமார்.

ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு

ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு

வனிதா விஜயகுமாருக்கு திடீரென புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா மாமா பாடலின் இந்தி வெர்ஷன் இசைக்கப்பட்டது. அதற்கு எப்படி ஆடப் போகிறார் என ரசிகர்கள் பார்த்த நிலையில், அதிரடியாக உள்ளே நுழைந்தார் சாண்டி. இருவரும் இணைந்து கலக்கல் நடனத்தை போடப் போறாங்களான்னு பார்த்தா நடந்ததே வேற!

பங்கம் பண்ணிய சாண்டி

பங்கம் பண்ணிய சாண்டி

மற்ற போட்டியாளர்களை வனிதா விஜயகுமார் பங்கம் பண்ண போகிறார் என எதிர்பார்த்த நிலையில் ஆரம்பத்திலேயே வனிதா விஜயகுமாரை சாண்டி பங்கமாக கலாய்த்து விட்டார். இந்த பாட்டுக்கா நீ டான்ஸ் ஆடப் போற உனக்கு ஏத்த ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடு என சொல்ல அரங்கமே அதிர்ந்தது ரசிகர்கள் இணையத்திலும் அதை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X