Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா பாதிப்பு.. இயக்குனர் சங்கீத் சிவன் உடல் நிலையில் முன்னேற்றம்.. சந்தோஷ் சிவன் தகவல்!
கொச்சி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சங்கீத் சிவன் உடல் நிலை, நன்றாக இருப்பதாக அவர் சகோதரர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன். இவர் இயக்கிய சில மலையாள படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன.
இவர் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.

தமிழில் அசோகன்
இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மது, ஊர்வசி நடிப்பில் யோதா என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படம், தமிழில் அசோகன் என்ற பெயரில் வெளியானது. அடுத்து அரவிந்த்சாமி, கவுதமி நடித்த டாடி என்ற மலையாளப் படத்தை இயக்கி இருந்தார்.

டாடி மம்மி
இது, தமிழில் டாடி மம்மி என்ற பெயரில் வெளியானது. ஜானி, கந்தர்வம், நிர்ணயம், இடியட்ஸ் உட்பட பல மலையாளப் படங்களை இயக்கியுள்ள சங்கீத் சிவன், இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சன்னி தியோல், சுஷ்மிதா நடித்த ஸோர், துஷார் கபூர் நடித்த கியா கூல் ஹே தும், தெலுங்கு ஒத்தடு ரீமேக்கான ஏக் உட்பட சில படங்களை இயக்கினார்.

கொரோனா பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன், சங்கீத் சிவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனது.
இதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் கண்காணிப்பு
அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.

உடல்நிலை முன்னேற்றம்
இந்நிலையில், அவர் இப்போது நன்றாக குணமடைந்து வருகிறார் என்று அவருடைய சகோதரர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசக் கருவி நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் உடல்நிலை இப்போது முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.