»   »  நிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்காத நடிகர்

நிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்காத நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்கவில்லை என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தையும் அதிர வைத்துள்ளது. அந்த கொடூரமான சம்பவத்தை யாராலும் மறந்துவிட முடியாது.

இந்நிலையில் இது குறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது,

நிர்பயா

நிர்பயா

நிர்பயா வழக்கு குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதை நினைத்து 10 நாட்களாக நான் தூங்கவே இல்லை. அந்த அளவுக்கு அந்த சம்பவம் என்னை பாதித்தது என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

மகள்கள்

மகள்கள்

மாற்றம் ஏற்பட வேண்டும். என் முழு ஆதரவு பெண்களுக்கு உண்டு. ஏன் என்றால் எனக்கும் இரண்டு மகள்கள் மற்றும் சகோதரிகள் உள்ளனர் என்கிறார் சஞ்சய் தத்.

மரியாதை

மரியாதை

மக்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.

நீதி

நீதி

விரைவில் நீதி கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்ததாக தெரியவில்லை. மைனர் என்று ஒரு குற்றவாளியை விட்டுவிட்டனர் என்கிறார் சஞ்சய் தத்.

English summary
Nirbhaya's rape case shook the whole nation, including Bollywood actor Sanjay Dutt. The actor in a recent interview revealed that he could not sleep for 10 days after hearing about the 16th December rape case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil