பாவனி இடத்தில் நான் இருந்திருந்தா...கிளாப்ஸ் அள்ளும் சஞ்சீவ் மனைவியின் பேச்சு
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருக்கும் சஞ்சீவ், பல சமயங்களில் நியாயமாக பேசவது, அறிவுரை வழங்குவது என அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்நிலையில் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி அளித்துள்ள பேட்டி, பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். இது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், அவரது குடும்ப பின்னணி பற்றி சில தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் சஞ்சீவே தன்னை பற்றி கூறினார்.

விஜய் ஓட்டு போட்டார்
இந்நிலையில் டிவி சேனல் ஒன்றிற்கு சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி அளித்த பேட்டி, ரசிகர்களிடம் கைதட்டல்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர் தனது பேட்டியில், தளபதி விஜய்யும் பிக்பாஸ் பார்க்கிறார். சஞ்சீவிற்காக விஜய் ஓட்டு போட்டிருப்பதாக அவரே கூறியதாகவும் ப்ரீத்தி சொல்லி உள்ளார்.

மறுபடியும் ஏன் செய்யனும்
அதோடு பாவனி காதல் விவகாரம் பற்றி கேட்டதற்கு பதிலளித்த ப்ரீத்தி, கமல் சார் ஏற்கனவே கூறியபடி கோவிட் 19 போல இதிலிருந்து அனைவரும் விலகி இருக்கலாம். ஆனால் ஏற்கனவே ஒருமுறை ஒருவரால் இப்படி ஒரு விஷயத்தில் பிரச்சனை சந்தித்து, கடும் விமர்சனத்திற்கு ஆளான பிறகும் எதற்காக அதை அவர் மறுபடியும் செய்ய வேண்டும். அபினய்யுடன் பழகியது தான் பிரச்சனையாக்கப்பட்டது, மறுபடியும் அமீருடன் ஃபிரண்ட்ஷிப்பாகவே இருந்தாலும் விலகி இருக்கலாமே.

அமீருக்கு நோ சொல்லிருக்கலாம்
சிரிப்பை கட் செய்து விட்டு அமீருக்கு நோ சொல்லி இருக்கலாம். ஒருவேளை அவர் நடிகை என்பதால் வெளியில் என்ன நினைப்பார்களோ என யோசிக்கலாம். என்ன காட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால் நடப்பதில், அவர்கள் செய்வதில் ஒரு சதவவீதத்தையாவது காட்டுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
Recommended Video

பாவனி என்ன செய்யலாம்
பாவனி இடத்தில் நான் இருந்தால், கண்டிப்பாக நோ சொல்லி இருப்பேன். அமீரை தவிர்த்திருப்பேன். இன்னும் மூன்று வாரங்கள் தான் உள்ளது. பாவனி கேமில் கவனம் செலுத்தவில்லை. அவர் அன்பை தேடிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் கேமில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications