»   »  சந்தானம் என்னை கைவிட்டுட்டார்: நடிகை பரபர பேட்டி

சந்தானம் என்னை கைவிட்டுட்டார்: நடிகை பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே அந்த ஜாங்கிரி தான்.

உதயநிதி ஸ்டாலினின் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளார் மதுமிதா.

சந்தானம்

சந்தானம்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் நடித்தேன். அவருடன் சேர்ந்து நடித்ததாலேயே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார் என்கிறார் மதுமிதா.

கைவிட்டார்

கைவிட்டார்

ஹீரோவான பிறகு சந்தானத்துடன் தொடர்பில் இல்லை. அவரின் செல்போன் எண் கூட எனக்கு தெரியாது. ஹீரோவான பிறகு அவர் என்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டார் என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.

சூரி

சூரி

சந்தானம் கைவிட்டாலும் சூரி எனக்கு கை கொடுத்து உதவி வருகிறார். ஜில்லா, வெள்ளைக்கார துரை ஆகிய படங்களில் சூரியுடன் சேர்ந்து நடித்தேன். தற்போது சரவணன் இருக்க பயமேன் படத்திலும் அவருடன் நடித்துள்ளேன் என மதுமிதா கூறியுள்ளார்.

மதுமிதா

மதுமிதா

தனக்கு மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைக்காதவர் சூரி. அதனால் அவருடன் நடிக்கும்போது என்னால் நன்றாக நடித்து பெயர் வாங்க முடிகிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.

English summary
Comey actress Madhumitha said that Santhanam doesn't care about her after becoming a hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil