»   »  அஜீத் படத்திற்காக கொள்கையைத் தளர்த்த விரும்பவில்லை - சந்தானம்

அஜீத் படத்திற்காக கொள்கையைத் தளர்த்த விரும்பவில்லை - சந்தானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படமென்பதற்காக கொள்கையைத் தளர்த்திக் கொள்ள விரும்பவில்லை என நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம் தற்போது 'தில்லுக்கு துட்டு', 'சர்வர் சுந்தரம்' போன்ற படங்களில், ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹீரோ ஆசையால் வருகின்ற காமெடி வாய்ப்புகளை சந்தானம் தொடர்ந்து இழந்து வருகிறார்.

மன்மதன்

மன்மதன்

சின்னத்திரை நடிகராக இருந்த சந்தானத்தை சிம்பு தன்னுடைய 'மன்மதன்' படத்தில் அறிமுகம் செய்தார். சிறிய வேடமென்றாலும் கிடைத்த கேப்பில் ரசிகர்களைக் கவர்ந்த சந்தானம் தொடர்ந்து சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். 'சிவா மனசுல சக்தி' படத்தில் ஹீரோவிற்கு இணையாக சந்தானத்திற்கும் ஒரு வேடத்தை ராஜேஷ் கொடுக்க அது சந்தானத்தின் திரையுலக வாழ்வுக்கு நன்றாக அடித்தளமிட்டது.

வடிவேலு

வடிவேலு

இடையில் சிறிது காலம் வடிவேலு நடிப்பை விட்டு ஒதுங்க தமிழ் சினிமாவின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வாக சந்தானம் மாறினார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் காமெடி ஹீரோவாக களமிறங்கி 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' படங்களில் முழுநீள ஹீரோவாக நடித்தார். ஹீரோவாக நடித்த படங்கள் சொதப்பவில்லை என்பதால் தற்போது 'நோ காமெடி ஒன்லி ஹீரோ' என்ற முடிவிற்கு சந்தானம் வந்துவிட்டார்.

தல 57

தல 57

'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து அஜீத்-சிறுத்தை சிவா மீண்டும் இணையும் படம் தல 57. இப்படத்தில் சந்தானம் காமெடி செய்தால் நன்றாக இருக்கும் என படக்குழு அவரை அணுகியது.இதனால் 'வீரம்' போல இப்படத்திலும் அஜீத்-சந்தானம் காமெடி பேசப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை சந்தானம் தற்போது நிராகரித்திருக்கிறார்.

சந்தானம்

சந்தானம்

இதுகுறித்து சந்தானம் '' எல்லோரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லவே விரும்புகிறார்கள். இன்றும் காமெடி வேடங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இதிலேயே நீண்ட காலம் நிலைத்திருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியிருக்கிறார். இதேபோல விஜய்யின் 'தெறி' படத்தையும் சந்தானம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Comedy Actor Santhanam Rejected Siruthai Siva- Ajith's Thala 57 Offer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil