Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Gulu Gulu Twitter Review: புரமோஷன் பண்ணலைன்னாலும்.. படம் நல்லா இருந்தா ஓடும்.. குலு குலு எப்படி?
சென்னை: மேயாதமான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது குலு குலு திரைப்படம்.
எந்த வேலை கிடைத்தாலும் செய்யும் ஹீரோவின் பெயர் கூகுள். ஆனால், அந்த பெயரே அவருக்கு குலு குலு என்று தான் கேட்கும் என்பது போல ஒரு காமெடி கதையை சொல்லி குலு குலு என டைட்டிலுக்கு அர்த்தம் சேர்த்துள்ள இடத்திலேயே தனது வித்தியாச சிந்தனையை வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
மாஸ்டர், விக்ரம் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்த ரத்னகுமாரின் குலு குலு திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? அல்லது எரிச்சல் அடைய செய்ததா என்கிற ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
திருமணத்திற்கு முன் உதவி இயக்குநரான ராமராஜன் செய்த காதல் லீலைகள்... நடிகை நளினியின் மலரும் நினைவுகள்

சந்தானத்தின் குலு குலு
ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் சந்தானம் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான சந்தானத்தை இந்த படத்தில் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள குலு குலு திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

புரமோஷன் இல்லைன்னாலும்
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான குலு குலு படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளே படம் வித்தியாசமான காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்ப்புகளை தூண்டியது. மேலும், ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் மற்றும் ஆடை படங்கள் ரசிகர்களுக்கு தந்த அனுபவம் காரணமாக இந்த படத்திற்கு பெரிதாக புரமோஷன் இல்லை என்றாலும், படம் நல்லா இருந்தா ஓடும் என்கிற நம்பிக்கையுடன் வந்த ரசிகர்களை ஏமாற்றவில்லை என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

பப்ஜி ஃபைட்
நடிகர் சந்தானம் வழக்கமாக செய்து வந்த பழைய ஸ்டைல் காமெடி படங்களில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்து புதுவிதமான காமெடி படத்தில் நடித்ததே ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் ஆக உள்ளது. மேலும், படத்தின் இடைவேளை காட்சியில் வரும் இந்தியா - சீனா பப்ஜி சண்டை பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ஃபுல் ஃபயர் மூட்
இந்த வாரம் வெளியான படங்களில் வின்னர் என்றால் அது சந்தானத்தின் குலு குலு திரைப்படம் தான் என்றும், தியேட்டரில் ரசிகர்கள் ஃபுல் ஃபயர் மூடில் உள்ளனர் என தியேட்டர் கொண்டாட்ட வீடியோவை ஷேர் செய்து இந்த ரசிகர் அதிர வைத்துள்ளார்.

பாலாபிஷேகம்
டாப் ஹீரோக்களுக்கு செய்வது போல நடிகர் சந்தானத்தின் பெரிய கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நீண்ட இடைவேளைக்கு பிறகு குலு குலு திரைப்படம் சந்தானத்திற்கு ஹிட் படமாக அமையும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.