Scoop: ராஜேஷ் கேட்டும் மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்... காரணம் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்- வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் மறுத்துவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து காமெடியில் கோலோச்சியவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே, நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என ரூட்டை மாற்றி, கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

சந்தானத்தை போலவே சின்னத்திரையில் இருந்து வந்தவர் சிவகார்த்திகேயன். நன்றாக காமெடி செய்தாலும், ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து, தற்போது தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

நீடிக்கும் தொழில் போட்டி

நீடிக்கும் தொழில் போட்டி

சந்தானத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொழில் போட்டி இருப்பது ஊர் அறிந்த விஷயம். எனவே தான் வேலைக்காரன் படமும், சக்கப் போடு போடு ராஜா படமும் ஒரே நாளில் வெளியானது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்

இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில், சந்தானம் நடிக்க மறுத்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, இயக்குனர் ராஜேஷின் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள், அவரது அடுத்தடுத்த படங்களில் ஒரு சீனிலாவது தலையை காட்டுவது வழக்கம்.

ஐந்து ஹீரோக்கள்

ஐந்து ஹீரோக்கள்

அந்த வகையில் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஒரு சீனில் வருகிறார்கள். ராஜேஷுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான சந்தானமும் இதில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

சந்தானம் மறுப்பு

சந்தானம் மறுப்பு

ஆனால் தன்னால் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்க முடியாது என சந்தானம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. சந்தானம் இதுபோல் கூறியதற்கு, சிவகார்த்திகேயனுக்கும், அவருக்கும் இடையே உள்ள தொழில் போட்டி தான் காரணம் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

எஸ்.எம்.எஸ். தொடங்கி விஎஸ்ஓபி வரை ராஜேஷ் படங்களில் சந்தானத்துக்கு என ஒரு தனி இடம் இருக்கும். ஹீரோவுக்கு நிகரான கேரக்டரில் தான் சந்தானத்தை அவர் நடிக்க வைத்திருப்பார். அப்படி இருக்கும் போது, ராஜேஷ் கேட்டும், சந்தானம் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவே கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X