Don't Miss!
- News
எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவு எந்த அணிக்கு.. அவங்களுக்குத்தான் அதிக சான்சாமே?
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
வேற வழியே இல்லை... மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பும் சந்தானம்... கைகொடுக்கும் அஜித்!
சென்னை: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சந்தானம்.
அதில் கிடைத்த பப்ளிசிட்டியால் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார்.
அதன்பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம், ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சந்தானம், தற்போது மீண்டும் காமெடி ரூட்டுக்கே திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா என்ற ஜாம்ஷத்.. புதுசா கிளப்பி விட்ட ஆர்யா.. தொடர்ந்த கார்த்தி, சந்தானம் உள்ளிட்டோர்!

காமெடி டூ ஹீரோ
விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்களில் சந்தானமும் மிக முக்கியமானவர். லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடி கலாட்டா பண்ண சந்தானம், சிம்பு மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். காமெடியனாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சந்தானம், கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தார். தனது காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதால் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சந்தானத்தின் ஹீரோ கனவுக்கு பலன் கிடைத்தாலும், அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவின

காமெடியனாக கம்பேக்
கடந்தாண்டு சந்தானம் ஹீரோவாக நடித்த குலு குலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூலிலும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் விரக்தியில் இருக்கும் சந்தானம், மீண்டும் காமெடியனாகவே நடிக்கலாம் என யோசித்து வருகிறாராம். ஏற்கனவே வடிவேலுவும் ஹீரோ ஆசையில் மோசம் போனதால், சந்தானமும் அதே சிந்தனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சந்தானத்துக்கு அஜித் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைகொடுக்கும் அஜித்
துணிவு படத்தை முடித்துவிட்ட அஜித், அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளது. இது அஜித்தின் 62வது படமாக உருவாகிறது. தற்போதைக்கு 'ஏகே 62' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதில் சந்தானமும் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் சந்தானத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்தும் ஓக்கே சொல்லிவிட்டதால் சந்தானமும் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

கம்பேக் கொடுக்குமா?
சந்தானத்தின் கேரக்டர் காமெடியாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர பாத்திரமாகவும் இருக்கும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித் - சந்தானம் காம்போ பல படங்களில் காமெடி ட்ரீட் கொடுத்துள்ளதால், ஏகே 62-வும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரவிந்த் சாமி அஜித்துக்கு வில்லனாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து ஏகே 62 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அப்டேட் வெளியாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனிடையே அஜித்தின் துணிவு படத்தின் FDFS அதிகாலை ஒரு மணிக்கு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.