»   »  எம் பொண்டாட்டி குண்டானது தான் நாட்டின் முக்கிய பிரச்சனையா?: சரண்யாவின் கணவர் ஆவேசம்

எம் பொண்டாட்டி குண்டானது தான் நாட்டின் முக்கிய பிரச்சனையா?: சரண்யாவின் கணவர் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகன் குண்டாகியுள்ளதை கிண்டல் செய்பவர்களுக்கு அவரின் கணவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை ஒருதலையாக காதலிப்பார். வேலாயுதம் படத்தில் விஜய் தங்கச்சியாக நடித்திருந்தார்.

வெண்ணிலா கபடிக் குழுவில் அவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

சரண்யா

சரண்யா

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருக்கும் சரண்யா தாயான பிறகு குண்டாகிவிட்டார். அவர் குண்டாக இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.

கணவர்

கணவர்

சரண்யாவை கிண்டல் செய்பவர்களுக்கு அவரின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை என்று அரவிந்த் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அரவிந்த்

அரவிந்த்

தனது மனைவியை கிண்டல் செய்பவர்களை பதிலுக்கு கலாய்த்து அரவிந்த் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை என்று அரவிந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Saranya Mohan's husband Arvind Krishnan has given a befitting reply to those who troll her for gaining weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil