»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மைசூர் அருகே நடிகர் சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கன்னட வெறியர்கள் சிலரால்தாக்கப்பட்டதற்கு தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் உருவாகி வரும் "சமுத்திரம்" படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகேஸ்ரீரங்கப்பட்டினாவில் நடந்து வந்தது. படப்பிடிப்பின்போது கூடியிருந்த கூட்டத்தினரை சற்றுத் தள்ளி நின்றுபார்க்குமாறு டைரக்டர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கன்னடக் கும்பல் சுமார் 200 பேருடன் பயங்கர ஆயுதங்களுடன் படப்பிடிப்பில் புகுந்துவன்முறையில் ஈடுபட்டது. இதில் நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணி, செந்தில், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர்பயங்கரமாக தாக்கப்பட்டனர். ரவிக்குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவிலிருந்து எந்த மாநில படப்பிடிப்புக் குழுவினர்தமிழகத்திற்கு வந்தாலும், எந்தவித பிரச்சினையுமின்றி படப்பிடிப்பை நடத்திவிட்டுச் செல்கின்றனர்.

அதேபோல, இந்தியாவில் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் எவ்வித பிரச்சினையுமின்றி படப்பிடிப்பை நடத்தமுடிகிறது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி தொடருகின்றன.

கன்னட வெறியர்களின் வெறியாட்டத்திற்கு, கன்னட நடிகர்கள் அம்பரீஷ், அனந்த்நாக், உபேந்திரா, நடிகர்ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளது ஆறுதல் தருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள கர்நாடக அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ராஜன்.

"சமுத்திரம்" படப்பிடிப்பில் கலவரம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil