»   »  'நாட்டாமை' கிட்ட கேள்வி கேட்கிறவங்க எல்லாம் இன்னிக்கு ராத்திரி ஃபேஸ்புக் வாங்க சாமியோவ்!

'நாட்டாமை' கிட்ட கேள்வி கேட்கிறவங்க எல்லாம் இன்னிக்கு ராத்திரி ஃபேஸ்புக் வாங்க சாமியோவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை ஃபேஸ்புக் மூலம் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

நடிகர் சங்க அறக்கட்டளை பணத்தில் ஊழல் செய்ததாகக் கூறி முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி உள்ளிட்டோர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இப்படியும் ஒரு சாதனை

இந்நிலையில் அவர்கள் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக நேற்று நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் சரத்குமார் இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை ஃபேஸ்புக் மூலம் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். இதை அவர் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

சரத் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அவர் அங்கிருந்தபடியே ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

English summary
Actor Sarathkumar is having a chat with fans tonight on Facebook. This chat session gets importance as he is having a session after getting expelled from Nadigar Sangam yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil