»   »  உலகின் தலை சிறந்த அப்பா.. சரத்துக்கு மகள் வரலட்சுமி பிறந்த நாள் வாழ்த்து!

உலகின் தலை சிறந்த அப்பா.. சரத்துக்கு மகள் வரலட்சுமி பிறந்த நாள் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் அவர்களின் 61 வது பிறந்த தினம் இன்று. 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி டெல்லி மாநகரில் பிறந்த சரத்குமார் இன்று தனது 61 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.

நடிகர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், தயாரிப்பாளர், பின்னணிப்பாடகர், இயக்குநர் என்று பன்முகங்களைக் கொண்ட சரத்குமார், அவர்களின் உண்மையான பெயர் ராமநாதன் சரத்குமார்.

நடிகர் சங்கத் தலைவராக விளங்கும் சரத்குமாருக்கு இளம்நடிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை, ட்விட்டர் மூலம் கூறிவருகின்றனர். அவற்றில் சிலபதிவுகளை இங்கு நாம் காணலாம்.

நல்ல மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தனுஷ்

எனது நல்ல நண்பரும் மிகச்சிறந்த மனிதருமான சரத்குமார் சார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பல்லாண்டுகள் வாழ்க - ஜெயம் ரவி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

அற்புதமான மனிதர் - சிம்பு

ஒரு அற்புதமான மனிதர் எங்கள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் நீண்டகாலம் வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – சிவகார்த்திகேயன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உண்மையான சரத்குமார் சாருக்கு என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார்.

சுப்ரீம் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – பிரேம்ஜி அமரன்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் பிரேம்ஜி அமரன் பதிவிட்டு இருக்கிறார்.

உலகத்தின் மிகச்சிறந்த அப்பா – வரலட்சுமி

சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், உலகத்தின் மிகச்சிறந்த தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், வாழ்க்கையில் எனது முன்மாதிரி நீங்கள்தான் என்று வாழ்த்தியிருக்கிறார்.

நண்பனுக்கு வாழ்த்துக்கள் – குஷ்பூ

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா, உன் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி பொங்கிட வாழ்த்துகிறேன். எனது அன்பு என்றும் மாறாது என்று நடிகை குஷ்பூ வாழ்த்தியிருக்கிறார்.

சமத்துவத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – சீனு ராமசாமி

சமத்துவத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தமிழில் அழகாக வாழ்த்தி இருக்கிறார், இயக்குநர் சீனு ராமசாமி.

English summary
Actor Sarathkumar Today Turns 61- Celebrities Twitter Wishes
Please Wait while comments are loading...