»   »  தொடங்கியது சரத்குமாரின் 'ரெண்டாவது ஆட்டம்'!

தொடங்கியது சரத்குமாரின் 'ரெண்டாவது ஆட்டம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம் டீமோடு கை கோர்க்கிறார் சரத்குமார். அந்தப் படத்துக்கு சென்டிமெண்டாக ரெண்டாவது ஆட்டம் என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரை சவாரி செய்து கொண்டிருக்கும் சரத்துக்கு, சினிமாவில் அடுத்த ரவுண்டு தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இப்படி தலைப்பிட்டுள்ளார்கள் போலிருக்கிறது.

Sarathkumar plays lead role in Rendavathu Aattam

இந்தப் படத்தை பிரித்வி ஆதித்யா என்ற இளம் இயக்குநர்தான் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்தப் படத்தின் மெய்ன் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியானவர் சரத்குமார்தான் என்று, இந்தக் கதையைக் கேட்ட என் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருமே கூறினர். அவருக்கு அத்தனைப் பொருத்தமாக அமைந்துவிட்ட வேடம் இது.

காவல் துறை அதிகாரி வேடத்தில் சரத் நடிக்கிறார். நடுத்தர வயது கொண்ட நாயகர்களின் படங்கள் இப்போது மக்களால் ரசிக்கப்படுகின்றன. அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும்.

அதோடு சரத்குமாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்," என்றார்.

English summary
Sarathkumar is playing lead role in debutante Prithvi's Rendavathu Aattam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil