twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, ரஜினி.. ஒரே பில்டப்பா இருக்கே.. மக்களுக்கான கேள்விகளை கேளுங்கள்.. கடுப்பான சரத்குமார்!

    |

    சென்னை: ரஜினி அரசியல் நிலை குறித்த கேள்விக்கு சரத்குமார் கோபமாக பதிலளித்தார்.

    சரத்குமார் கடந்த 1994ல் இருந்து அரசியலில் தன் பங்கை செலுத்தி வருகிறார். சரத்குமார் 2007ல் தனது அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அப்போதிலிருந்து அரசியல் சார்ந்த பல விஷயங்களையும் அரசியல் சார்ந்த பல கருத்துக்களையும் தொடர்ந்து பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

    Sarathkumar press meet

    தற்போது ரஜினியின் அரசியல் நிலை குறித்து ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற சரத்குமாரிடம் கேட்கபட்டது. இதற்கு பதிலளித்துள்ள சரத்குமார், ரஜினியை பற்றிய கேள்விகளையே தொடர்ந்து கேட்டு கேட்டு பில்ட்அப் கொடுத்து வருகிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

    மேலும் பேசிய சரத்குமார் மக்களுக்கான கேள்விகளை என்னிடம் கேளுங்கள் அதற்கு பதில் கூற இந்த சரத்குமார் காத்திருக்கிறான். சம்மந்தமில்லாத கேள்விகளை என்னிடம் கேட்பதை தயவு செய்து தவிருங்கள் என கூறினார்.

    ஆல் இஸ் வெல் அமீர்கான்.. அவர் குறித்து தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்.. பிறந்த நாள் ஸ்பெஷல்!ஆல் இஸ் வெல் அமீர்கான்.. அவர் குறித்து தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்.. பிறந்த நாள் ஸ்பெஷல்!

    குடியுரிமை சட்டதிருத்தத்தை பற்றிய கருத்தை தெரிவித்த சரத்குமார் இது இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான சட்டம் இல்லை. இது இஸ்லாமிய சகோதரர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்தை அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்று அந்த சட்டத்தை பற்றி படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    Sarathkumar press meet

    தற்போது கொரோனா நாடு முழுவதும் பரவி வருவதால் பொது இடங்களில் கூட்டம் போட கூட்டம் கூட அரசு கொஞ்சம் கொஞ்சமாக தடை விதித்து வருகிறது. தற்போது மார்ச் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளை கொரோனா காரணமாக தள்ளி வைத்திருக்கிறது இந்திய அரசு. இது பற்றிய கருத்தை பகிர்ந்த சரத்குமார், ஆமாம் கட்டாயம் இதை கடைப்பிடிக்க வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் யாருக்கும் கை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    English summary
    Sarathkumar replied that please don't question me about Rajini
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X